ராகசுதாவுடன் 2ம் திருமணம்! மீண்டும் வந்த ரஞ்சித்! ப்ரியா ராமன் செய்தது என்ன? "வள்ளி" பார்த்தீங்களா?
சென்னை: ப்ரியா ராமனை விட்டு ரஞ்சித் பிரிந்து சென்று, நடிகை ராகசுதாவை மணந்து பிறகு , திருந்தி மீண்டும் தன்னிடமே வந்த கணவரை பிரியா ராமன் என்ன செய்தார் தெரியுமா? இதுதான் அன்பு!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ப்ரியா ராமன், "சூர்யவம்சம்" படத்தில் முதலில் திமிராக வருவார். அவருக்கு சரத்குமார் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருப்பார். கணவனின் தொழில் வீழ்ந்தவுடன் சரத்குமாரை தேடிவந்து உதவி கேட்பார்.
அது திரையில்.
ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. கணவர் விட்டுச் சென்றாலும் தன் வாழ்க்கையை தன் குழந்தைகளுக்காக வடிவமைத்துக் கொண்டார். பாரதிராஜா டில்லியைச் சேர்ந்த ப்ரியாராமனை தன் படத்தில் நாயகியாக்க தீர்மானித்திருந்தார். அவரது புகைப்படம் ரஜினியின் கைக்குப் போக ரஜினியின் 'வள்ளி'யாக மாறினார்.

எந்த நடிகைக்கும் வாய்க்காத வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் எழுதிய கதைக்கு, சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்த, அவருடனே நடித்த பாக்யம். அதுவும் டைட்டில் ரோலில். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு. ஐ.வி.சசி அறிமுகப்படுத்தியது 'சைன்யம்' படத்தில். விமானியாக.
சுரேஷ்கோபியுடன் காஷ்மீரம் படத்தில் ஆக்ரா கோட்டைகளில் அவர் ஆடும் ஆட்டம் 90 கால மலையாளிகள் மறக்காதது. ஃபாஸில் படத்தில் மம்முட்டியுடன். மோகன்லாலின் ஆறாம் தம்புரான் படத்தில் ப்ரியாராமனின் பெயர் 'நயன்தாரா'.
அதோடு அவரின் மற்றொரு பாக்யம் கே.விஸ்வநாத் இயக்க, எஸ்.பி.பாலசுப்ரமண்யம் - கமல் தயாரிக்க கமலுடனே நடித்தது. படம் சுபசங்கல்பம்.
தமிழில் 'பாசவலை'. சித்ரா லக்ஷ்மணன் தயாரித்து, இயக்க, கார்த்திக்குடன் 'சின்னராஜா'. நல்ல நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 'நேசம் புதுசு' படத்தில் ரஞ்சித்துடன் ஜோடி. ஷூட்டிங் இடைவேளையில் உண்டான பழக்கம் திருமணத்தில் முடிந்தது.
இரண்டு ஆண் குழந்தைகள். பதினைந்து வருட திருமண பந்தம் முறிந்த போது ப்ரியா கவலைப்படவில்லை. இரண்டு மகன்களோடு தன் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டார். சீரியல் அவருக்கு கை கொடுத்தது. சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார். கடந்த கால கசப்புகளை சீரியஸாகவே எடுக்கவில்லை. ரஞ்சித் நடிகை ராகசுதாவை மணந்த போதும் அவர் கவலைப்படவில்லை.
அவர் வாழ்க்கையை பார்த்த விதமே வேறு என்பது பின்னொரு நாளில் தெரிந்தது.
ஆம்... ஆடி, ஓடி, ஓய்ந்து ரஞ்சித் அவரைத் தேடி வந்த போது ப்ரியா ராமன் ஒதுக்கவில்லை. விவாகரத்தான மனிதரெனவும் நினைக்கவில்லை. வள்ளி படத்தில் திரும்பி, திருந்தி வரும் நாயகனை வள்ளி கொல்வாள்.
வாழ்க்கைப் பிச்சை வாங்கியது என்பதெல்லாம் சூர்யவம்சம் படத்தின் கௌரி தான். இப்போ இருப்பது வள்ளியுமல்ல. கௌரியுமல்ல. இப்போ நாங்களே போடுவோம் வாழ்க்கைப் பிச்சை... அது தான் ப்ரியா ராமன்....இங்கே சாதியுமில்லை...சம்பிரதாயமுமில்லை...ஜெயித்தது அன்பு மட்டுமே..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications