Nila Serial: என்ன சோப் யூஸ் பண்றே? நீங்களே கண்டு பிடிங்க!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் சூரியா கதிர் ரெண்டு பேரும் லவ்வர்ஸ். சூர்யாவின் அம்மா ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கறேன்னும் சொல்லிட்டாங்க.
இன்ஸ்பெக்டரா இருக்கும் கதிர் சூர்யாவை பார்க்க.. அதாவது டியூட்டியை பார்க்காம பியூட்டியை பார்க்க வீட்டுக்கு வந்துட்டான். மம்மி வீட்டில் இல்லை... அப்போதுதான் கதிரிடம் குளிச்சுட்டு வரேன்னு சொல்லி போறா சூர்யா.
ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்கிறான் கதிர்...அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு குளிச்சுட்டு வந்த சூரியா என்ன சோப் போட்டு குளிச்சா?இதுதான் கதிரின் போலீஸ் மண்டைக்குள் இப்போ குடைச்சலா இருக்கு.

குளியலா சமையலா
சூர்யா நான் குளிச்சுட்டு வரேன்னு சொல்லி கிளம்பறா.. சூர்யா ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு.. என்று சொல்கிறான் கதிர். நான் என்ன சமையலா செய்யறேன்...குளிக்கத்தானே போறேன்னு இவளும் பாத்ரூம் உள்ளே போகாமல் வெளியில் நின்னுக்கிட்டே பேசிகிட்டு இருக்கா.

குளிக்கறதுக்கும் ஹெல்ப்
சமையலுக்கு மட்டும்தான் ஹெல்ப் பண்ணனுமா.. குளிக்கறதுக்கும் பண்ணலாமேன்னு சொல்றான் கதிர். இத்தனை நாள் நானாத்தான் குளிச்சேன்.. இப்போ என்ன புதுசா... ஏன் உங்க போலீஸ் மூளை இப்படிப்பட்ட வேலையையும் செய்ய சொல்லுதான்னு கேட்கிறாள். பொண்டாட்டியாகப் போறவளுக்கு புருஷனாகப் போறவன் செய்யற உதவி.. இதுக்கு நீ கிஃப்ட் தரலாம்னு சொல்றான் கதிர்.

அப்பா ஒரு வழியா
ஸ்ஸ்ஸ் அப்படான்னு சொல்ற அளவுக்கு ஒரு வழியா பாத்ரூமுக்குள்ளே குளிக்க போயிட்டா சூர்யா. அவள் குளித்துவிட்டு, சோப் மணக்க.. உடல் முழுக்க ஈரம் படர்ந்திருக்க...ஈரத்தில் முடி நூல் நூலாகத் திரிந்து தொங்க.. வந்து கொண்டு இருக்க...அந்த அழகை பார்த்து மலைத்து நிற்கிறான் கதிர்.

என்ன சோப்
சூர்யா சந்தணம் மணக்குது... என்ன சோப் போட்டுக் குளிச்சே என்று கேட்கிறான் கதிர். என் புருஷந்தான் பெரிய போலீஸ் ஆஃபீசராச்சே.. கண்டுபிடிங்க பார்ப்போம் என்று சொல்கிறாள் சூர்யா. கண்டுபிடிப்பேன்.. என்ன சோப்ன்னு கண்டுபிடிச்சு நான்தானே என் பொண்டாட்டிக்கு சோப்பு வாங்கித் தரணும்னு அவளை நெருங்கிப் போகிறான். எதுக்கு கிட்டே வர்றீங்கன்னு அவள் பின்னால் நகர...சோப் வாசனை கண்டு பிடிக்கணும்னா கிட்டே வந்து நான் எல்லை மீறித்தான் ஆகணும்னு கிட்டே வர...டமால்னு கதவைத் திறந்துகிட்டு அம்மா வந்துட்டாங்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications