அழகம்மை வீட்டு வாரிசை அழிக்கறதா... என்ன பண்ணுவா அவ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரெண்டாவது மருமக பூர்ணா வீட்டுக்கு அடங்காத மருமக. மூத்த மருமக சுதா குடும்பத்துக்கு தேவையானதை செய்து நல்ல பேர் எடுத்திருக்கா.

பூர்ணா தான் ஒரு அனாதைன்னு தெரிஞ்சதும்,, அழைக்கம்மை குடும்பத்தோட சுத்தமா ஒட்டவே மாட்றா. இந்த நேரத்துல மகேஷ் குழந்தையை தன் வயித்துல சுமக்கறதை நினைச்சா அருவெறுப்பா இருக்குன்னு சொல்லிட்டு குழந்தை தானா கலைஞ்சுடணும்னு முயற்சியில இருக்கா.

What will do Azhagammai if decides for abortion

அழகம்மை எத்தனையோ புத்திமதி சொல்லியும் கேட்கலை. குழந்தையை, இந்த வீட்டு வாரிசை நீ பெத்துதான் தரணும்னு சொல்லிடறாங்க அழகம்மை.

மகேஷ்.. நீயும் சாப்பிட உட்காரு..பூர்ணாவை கூப்பிட்டியான்னு கேட்கறாங்க அம்மா அழகம்மை. அவளுக்கு சாப்பாடு வேண்டாமாம்மா.. பழம் வாங்கிட்டு வர சொன்னா கொடுத்திருக்கேன். அதை சாப்பிட்டுக்கறாளாம்னு சொல்றான் மகேஷ்.

சரி..சரி.. அவளுக்கு ஆரோக்கியமா இருக்குன்னு அவ நினைக்கறதை சாப்பிட்டா நல்லதுதான்.. பசி அடங்கற மாதிரி அப்படி என்ன பழம் வாங்கிட்டு வந்த மகேஷ்ன்னு அம்மா கேட்க, பப்பாளி, அன்னாசி, எள்ளுருண்டை, இதெல்லாம் வாங்கிட்டு வர சொன்னம்மான்னு சொல்றான் மகேஷ்.

What will do Azhagammai if decides for abortion

அதிர்ச்சியான அழகம்மை, கர்ப்பமான பொண்ணுங்க இதெல்லாம் சாப்பிட கூடாதுடா.. உனக்கு தெரியாதான்னு கேட்டுட்டு, பூர்ணா ரூமுக்கு வேகமா போறாங்க. அங்கே பப்பாளி சாப்பிட போன பூர்ணாவின் கையிலிருந்த பப்பாளியை வாங்கிக்கறாங்க.

என்ன பூர்ணா இது.. குல வாரிசை நீயும், மகேஷும் பெத்து தருவீங்கன்னு ஆசையா இருக்கோம். உனக்கு புரியவே மாட்டேங்குதேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. வெட்கத்தை விட்டு சொல்லணும்னா இது எனக்கே தெரியாம உருவான குழந்தைன்னு அழறா பூர்ணா.

என்னம்மா சொல்றேன்னு அழகம்மை கேட்க.. ஆமாம்ங்க.. உங்க புள்ளை எனக்கு மயக்க மருந்து குடுத்து இந்த குழந்தை உருவாகி இருக்கு. எனக்கு இதை நினைச்சாலே அருவெறுப்பா இருக்குன்னு சொல்றா.

What will do Azhagammai if decides for abortion

மகேஷ் ஏன் இப்படி செய்தான்.. அவன் செய்தது ரொம்ப . தப்புதான்.ஆனா, பூர்ணா அவன் செய்ததைவிட இப்போ நீ செய்யறியே அதுதான் பெரிய பாவம்னு அழகம்மை சொல்ல, இருந்தா இருக்கட்டும்., எந்த பாவமா இருந்தாலும் நானே அனுபவிச்சுக்கறேன். ஆனா, இந்த குழந்தையை மட்டும் பெத்து தர மாட்டேன்னு சொல்றா.

அப்போ சரிம்மா.. உன் இஷ்டம்.. நீ எதை வேணா சாப்பிடுன்னு சொல்லிட்டு வந்துடறாங்க. என்ன அழகு இப்படி சொல்லிட்டு வந்துட்டே.. பூர்ணா அதை சாப்பிட்டா என்னாகும்னு கேட்கறார் புருஷன். இல்லை ரவிப்பா...பூர்ணா நாம் வேணும் வேணும்னு சொன்னா வேணாம்னு சொல்லுவா.. வேணாம்னு சொன்னா வேணும்னு சொல்லுவா. அதான் அப்படி சொல்லிட்டு வந்திருக்கேன். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு சொல்றாங்க.

ஆனா, அழைகம்மை கணக்கு இப்போதைக்கு தப்பாகி, மறுநாள் மகேஷை டைவர்ஸ் பண்ண நோட்டீஸ் வருது. அழைக்கம்மை குடும்பம் என்னாகுமோ...அழகம்மை இன்னும் என்ன கஷ்டத்தை தாங்கணுமோ..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+