சங்கடத்தில் சங்கீதா.. விடாமல் சுற்றும் ஹேஷ்டேக்.. ஓயாமல் பரவும் விஜய் வதந்தி.. இதுக்கு எண்டே இல்லையா
சென்னை: விஜய் - சங்கீதா கடந்த சில வருடங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், சங்கீதாவிற்கு நீதி கேட்கும் வகையில் #JusticeforSangeetha என்ற ஹேஷ்டேக், 4 நாளை கடந்து ட்விட்டரில் இன்னமும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதனிடையே, தொடர்ந்து பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கு, விஜய் தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தமிழ் சினிமா உலகில் எழுந்துள்ளது.
லியோ படத்தில் விஜய் - த்ரிஷாவின் லிப் லாக் காட்சியால்தான், சங்கீதா விஜய்யை பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு த்ரிஷா பதிவிட்ட போட்டோவும், அதற்கு அவர் வெளியிட்டிருந்த கேப்ஷன், அதற்காக ஷேர் செய்யப்பட்டிருந்த பாடல் போன்றவை அனைத்துமே, ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிவிட்டன.

சலசலப்புகள்: இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஒரே விமானத்தில், த்ரிஷாவுடன் பயணித்து, கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு விஜய் சென்றது உச்சக்கட்ட பரபரப்பை தந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், #JusticeforSangeetha என்ற ஹாஷ்டேக் கடந்த வாரம் முதல் இணையத்தில் டிரெண்டாக துவங்கிவிட்டது. விஜய்யின் ஹேட்டர்கள் பலர் சோஷியல் மீடியாவில் இதை டிரெண்ட் செய்தாலும், அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு எதிராகவும், சிலர் இதை அளவுக்கு அதிகமாக டிரெண்டாக்கி வருகிறார்கள். நடிகர் விஜய் குடும்பத்தை பிரிந்துவிட்டு த்ரிஷாவுடன் சுற்றுவது சரியல்ல என்று நலம்விரும்பிகளும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சங்கீதா: விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கும், விஜய்யின் பட விழாக்களுக்கும், பிரபலங்களின் இல்ல விழாக்களுக்கும்கூட, சங்கீதா பங்கேற்கவில்லை. அதேபோல, மகன் இயக்கும் முதல் படத்தின் எந்த நிகழ்விலும் விஜய் கலந்துகொள்ளவும் இல்லை. ஆனால், சங்கீதா தரப்பில் இதுகுறித்து எந்தவொரு கருத்துமே வெளியிடப்படவில்லை.
முற்றுப்புள்ளி : இப்படி நித்தம் ஒருபுகைச்சல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், விஜய் குடும்பத்தின் உண்மைத்தன்மை என்ன என்று இதுவரை தெரியவில்லை. எனினும் ஏகப்பட்ட வதந்திகள் தினந்தோறும் பரவி வரும் நிலையில், விஜய் இதற்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications