எதிர்நீச்சல்: போக போற பெரிய உசுரு? இதை கவனிச்சீங்களா? எலி போல மாட்டிய கதிர்.. பிளான் போட்டதே அவரா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தனியாக வந்து கௌதமிடம் மாட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இத்தனை பிரச்சனைகளுக்கும் பிளான் போட்டது யார் என்று எதிர்பார்ப்பும் கேள்விகளோ ரசிகர்களின் மனதில் இருக்கிறது.

அதுபோல ஜோதிடர் ஏற்கனவே வீட்டில் பெரிய உசுரு போகப் போகிறது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களாக எதிர்நீச்சல் சீரியலில் இழுவை காட்சிகள் தான் அதிகமாக இருந்தது.
ஆதி குணசேகரன் ஆக வேலராம மூர்த்தி அறிமுகமானதுமே அவர் போலீஸ் ஆபீசர்களிடம் பிரச்சனை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவது போன்று காட்சிகளை வைத்து அவர் சில நாட்களாக சீரியலில் இல்லாமல் இருந்தார். இதனாலையே கதையில் புதியதாக மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜனனியின் தம்பி ஒருவரை வில்லனாக அறிமுகம் செய்திருந்தனர்

. அதைத் தொடர்ந்து எல்லோரும் கோயிலுக்கு நான்கு நாட்களாக காரில் வந்து கொண்டிருந்தனர். இப்படியாக இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று எபிசோடு தாறுமாறாக இருந்தது. அதுவும் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் பலருக்கும் இருக்கிறது. காரணம் இத்தனை நாட்களாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கதிர் கௌதமிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.
கோவில் திருவிழாவில் வைத்து ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் கொலை செய்ய வேண்டும் என்று கதிர் இரண்டு நாளைக்கு முன்பே கிளம்பி வந்து இருந்த நிலையில் பூங்குழலி என்ற பெண் போன் செய்த காரணத்தால் கூட வந்த கரிகாலனையும், கிள்ளி வளவனையும் கழட்டிவிட்டு தான் வந்த வேலையை மறந்து அந்த பெண்ணை தேடி போயிருந்த நிலையில் அங்கு கௌதமிடம் மாட்டி இருக்கிறார்.

ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும்தான் என்பதை தெரிந்து கொண்ட கௌதம் இதைப்பற்றி ஜீவானந்தத்திடம் கூட சொல்லாமல் நானே இவர்களை பழி தீர்த்துக் கொள்கிறேன் என்று சபதம் போட்டிருந்தார். அதே நேரத்தில் ஈஸ்வரி மூலமாக ஜீவானந்தத்திற்கும் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் கோவில் திருவிழாவில் என்ன நடக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதே நேரத்தில் இப்போது கதிர் கௌதமிடம் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் நந்தினி ஆசைப்பட்ட மாதிரியே கௌதம் கதிர் கை, கால்களை உடைத்து படுக்கையில் போடுவாரா? அல்லது கடைசி நேரத்தில் கதிரை யாராவது காப்பாற்றி விடுவார்களா? என்று எபிசோட் தெரிய வரும்.

அதே நேரத்தில் கதிர் வசமாக சிக்கிக் கொள்வதை பார்க்கும் போது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் "பொம்பள சோக்கு கேக்குதா கதிரு...?" என்ற டயலாக்கை தான் பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஒரு முறை கதிரை பார்த்து அவருடைய மாமா அதாவது விசாலாட்சியின் தம்பி உனக்கு வெளியே இருக்கும் பெண்களால்தான் பிரச்சனையே வரப்போகுது என்று கூறியிருப்பார்.
இது எதிர்நீச்சல் சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். அதுபோல தான் ஆதிரையின் கல்யாண நேரத்தில் கூட ஜனனியோடு வேலை பார்க்கும் பெண்ணை வைத்து ஃபோன் செய்து கதிரை ஏமாற்றி இருந்தவர். அதுபோல இப்போதும் பூங்குழலியை வைத்து கௌதம் ஏமாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் இந்த பிளான் எல்லாம் போட்டு காய் நகர்த்துவது ஜீவானந்தம் தானா? அல்லது கௌதமா என்ற கேள்விகளும் எழுகிறது. அதற்கான விடையும் இன்றைய எபிசோடில் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications