ஆர்த்தியை விடுங்க.. மாலையும் கழுத்துமாக ஜெயம் ரவி.. கல்யாண பத்திரிகை ரெடி.. யாரந்த பெண்? தலைசுத்துதே
சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்குள் குடும்ப சண்டை விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், இணையத்தில் ஒரு போட்டோ வெளியாகியிருக்கிறது. ஜெயம் ரவி மாலையும், கழுத்துமாக நிற்பதை கண்டு, இணையவாசிகள் குழம்பி கிடக்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக கல்யாண பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் தெரியவில்லை. தனக்கிருக்கும் பிரச்சனைகளை ஜெயம் ரவி வெளிப்படையாக சொல்லியிருந்ததுடன், ஆர்த்தி மீதான சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

குற்றச்சாட்டு: இந்த குற்றச்சாட்டுகளுக்கு மவுனம் காத்து வந்த ஆர்த்தி, சில நாட்களுக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "தான் அமைதியாக இருப்பதற்கு குற்ற உணர்ச்சியோ, பலவீனமோ காரணம் இல்லை.. நீதித் துறை மீது நம்பிக்கை இருக்கிறது.. திருமணத்தைப் புனிதமாகக் கருதுவதால், இது தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை" என்றார்.
அதாவது, ஜெயம் ரவியுடன் பேசக் காத்திருப்பதாகவும், அவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அந்த அறிக்கை இருப்பதாக தெரிகிறது.. ஆர்த்தியின் இந்த திடீர் சமாதான நடவடிக்கைக்கு இதுவரை ஜெயம் ரவி பதிலளிக்கவில்லை..
புரமோஷன்: ஆனால், தன்னுடைய படவேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார் ஜெயம்ரவி.. மும்பையில் புது ஆபீஸ் ஒன்றை நிறுவியுள்ள ஜெயம் ரவி, தன்னுடைய தமிழ் படங்களுக்கான பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேபோல, "பிரதர்" படமும் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், அது சம்பந்தமான புரமோஷன் வேலைகளிலும் இறங்கி வருகிறார்.
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியிடன், ப்ரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பிரதர்.. கடந்த சில நாட்களாகவே, பிரதர் படத்தின் புரமோஷன்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆடியோ ரிலீசுக்கு பிறகு, இன்ஸ்டாகிராமிலும், பிரதர் படத்தினை புரமோட் செய்து வருகிறார் ஜெயம் ரவி.
குழப்பம்: அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு, ஜெயம் ரவியும், ப்ரியங்கா மோகனும் கழுத்தில் மாலை அணிந்தபடி ஒரு போட்டோ வெளியானது. இப்படி மாலையும் கழுத்துமாக இந்த ஜோடியை பார்த்ததுமே, ஒட்டுமொத்த இணையதளமே குழம்பிவிட்டது. அதுக்குள்ள இன்னொரு திருமணம் நடந்துவிட்டதா? என்று கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். பிறகுதான் இது பிரதர் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ என்பது தெரியவந்தது.
இந்த படத்தில் மக்காமிஷி என்ற பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டாகியது... இந்த படத்துக்கு U சான்றிதழும் கிடைத்திருக்கிறது.. படத்தின் காலநேரம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக்கவும் முடிவாகியிருக்கிறது.
கல்யாண பத்திரிகை: இந்த படத்தில் "மெதக்குது காலு ரெண்டும்" என்ற பாடல் வரும் 23ம் தேதி மாலை மாலை 5 மணிக்கு வெளியாக போகிறது.. எனவே, இந்த பாடலையும் வித்தியாசமாக புரமோட் செய்ய நினைத்த படக்குழு, கிட்டத்தட்ட கல்யாண பத்திரிகையை போல வடிவமைத்து போஸ்டர் வெளியிட்டிருக்கிறது. இந்த போஸ்டரில்தான் ஜெயம்ரவி ஜோடியுடன் மாலையும் கழுத்துமாக நிற்கிறார்.
ஜெயம்ரவிக்கு 2வது கல்யாணமா? என்று ஏற்கனவே சோஷியல் மீடியாவில் யூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கும்நிலையில், இந்த திருமண பத்திரிகையும், கல்யாண போட்டோவும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதனிடையே, பிரதர் படத்தின் "மெதக்குது காலு ரெண்டும்" என்ற பாடல் நாளை அக்டோபர் 23, மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.. கல்யாண பத்திரிக்கை வடிவில் போஸ்டர் வெளியிட்டு, இந்த தகவலைதான் படக்குழு அறிவித்துள்ளது. அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications