கோபி ஏன் இன்னும் வரலே... இதெல்லாம் சீட்டிங் இல்லையா...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபி காணாமல் போயிட்டாருங்க.

கதைப்படி கோபி காணாமல் போயி ரெண்டு மாசமாகுது. கடந்த ரெண்டு மாசமா கோபியா நடிக்கற திருமுருகன் கல்யாண வீடு சீரியலின் இயக்குநர்.

திருமுருகன் இயக்கும் சீரியல்களில் ஸ்டார் காஸ்ட் என்று சொன்னாலே அது திருமுருகன். அவருக்காக சீரியல் பார்ப்பவங்கதான் அதிகம்.

நோ லாஜிக்

நோ லாஜிக்

சீரியலில் இவர் நடிச்சு இருந்தால் மக்கள் எந்தவித லாஜிக்கும் பாரக்க மாட்டாங்க.கதையில் அவர் என்ன சொன்னாலும் நம்புவார்கள்.எதாவது வசனம் பேசி காட்சியை சரி செய்துடுவார்.

நறநறன்னு இருக்கு

நறநறன்னு இருக்கு

எப்போதும் பரபரப்பாக ஹரி படம் மாதிரி போகும் திருமுருகன் சீரியல் இப்போது அவர் இல்லாமல் டல்லடிக்குது. இதில் சும்மா எபிசோடில் கடைசி நொடியில் கோபி படத்தை போட்டு முடிப்பது எரிச்சலை கிளம்புவதாக இருக்கிறது.

ஏன் சீட்

ஏன் சீட்

திருமுருகன் நீங்க குறும் படத்தில் நடிக்க போங்க... பெரிய திரையில்கூட நடிக்க போங்க...அதுக்காக உங்களுக்கு பேரும் புகழும் வாங்கித் தந்த சின்னத்திரை ரசிகர்களை ..ஏமாத்தலாமா? இதில் நடிப்பதும் உங்கள் டியூட்டிதானே...

மாசம் எத்தனை

மாசம் எத்தனை

ஏங்க கதையின் முக்கிய நாயகன் எத்தனை மாசத்துக்குங்க காணாமல் போவாங்க... இதனால கதையின் போக்கே திசை மாறிப்போயி எங்களுக்கு பிடிக்கலைன்னு சீரியல் ஆர்வலர்கள் புலம்பறது உங்களுக்கு கேட்கலையா?

ராஜா சூர்யா

ராஜா சூர்யா

கடைசியில் ராஜாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் நடக்கற அளவுக்கு சொதப்பலா கதையை கொண்டு வந்துட்டீங்க... ரோஜா கலைஞ்சு போன கந்தலாகிப் போன துனியா ஆஸ்பத்திரியில் கிடக்கா...அங்கேயும் ஒரு கெட்டவனை வச்சு.. எல்லார் மனசிலயும் பயத்தைத்தான் உண்டாக்கி இருக்கீங்க.

லாட்ஜ்

லாட்ஜ்

கல்யாணவீடு சீரியல் இதுவரை சொன்ன தத்துவம்... லாட்ஜிலும், ஆஸ்பத்திரியிலும் யாரையும் நம்பி இருக்காதீங்க... எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதுதான்...

கேங் ரேப்

கேங் ரேப்

அது சரி.. ரோஜாவுக்கு கேங் ரேப்னு பெரிய விஷயத்தை கையில் எடுத்து இருக்கீங்க... இதுக்கு உங்க சார்பா சீரியலில் என்ன தீர்ப்பு சொல்லப் போறீங்க... இந்த விஷயத்தை எப்படி கொண்டு போகப்போறீங்க...இதுல கொஞ்சம் சமூக அக்கறையோடு நடந்துக்கிட்டா நல்லாருக்கும்.

நீங்க எடுக்கறது

நீங்க எடுக்கறது

நீங்க சொல்றதுதான் கதை... நீங்க எடுக்கறதுதான் சீரியல்னு நாங்க பார்க்கணும்னு நீங்க நினைச்சால்... சாரி அது ஓவர் கான்ஃபிடன்ஸ்... ஆனாலும் அதையும் விடாமல் பார்ப்பதுதான் மக்களின் ஸ்பெஷாலிட்டி. காரணம், திருமுருகன் மீது அத்தனை நம்பிக்கை மக்களிடம்.

வசனம்வேதனை

வசனம்வேதனை

இந்த எபிசோடில் ஒரு காட்சி நம்மளை தூக்கி வாரிப் போட வச்சது. அதாவது ரோஜா எங்கே என்று மருத்துவமனை ரிசப்ஷனில் கேட்பவர்களிடம், யாரு நாலு பேர் சேர்ந்து நாசம் செய்தார்களே அவரா என்று ரிசப்ஷனிஸ்ட் கேட்கிறார். இது நமக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. அதுவும் ஒரு பெண்ணை வைத்து இப்படி வசனம் பேச விடலாமா.. தப்பு இல்லையா.. அதுவும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ள நிலையில் இந்த வசனம் வேதனை தருவதாக உள்ளது. தவிர்க்கலாமே திரு சார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+