பிக்பாஸ் 2... இந்த தடவை மருத்துவ முத்தம் தரப் போவது யார்? பெறப்போவது யார்?
பிக்பாஸ் சீசன் 2வில் இம்முறை இடம்பெறப் போகும் காதல் பறவைகள் யார் என பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Recommended Video

சென்னை : பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாக இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதுவரை மக்களுக்கு அதில் கலந்து கொள்ளப் போகிறவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள பொறுமை இல்லை. இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்பது தான் இப்போது ஹாட் டாபிக்கே.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல், ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வாழ்ந்த பிரபலங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைப் பார்ப்பதில் மக்களுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்.
தினமும் என்ன வேலை இருக்கிறதோ இல்லையோ, இரவு 9 மணியானால் டிவி முன் ஆஜராகி விட்டனர் கோடிக்கணக்கான மக்கள். இது ஓவியாவிற்கு கிடைத்த வாக்கே சாட்சி.

வரும் 17ம் தேதி முதல்:
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி முதல் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

குறிப்புகள் மட்டும்:
அதேபோல், கடந்த முறை மாதிரியே இம்முறையும் அதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்துள்ளனர். ஆனால் அவ்வப்போது புரோமோக்கள் மூலம் போட்டியாளர்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தந்த வண்ணம் உள்ளனர்.

எல்லோரும் உண்டு:
முதல் சீசன் இருந்தது போன்றே கலவையான நபர்களை இம்முறையும் போட்டியாளர்களாக கொண்டுவர நிகழ்ச்சி தயாரிப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, கடந்த முறை போலவே புதிய பிரச்சினைகளைக் கொண்டு வருபவர், பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குபவர், காமெடிக்கு ஒருவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவர் என ஒவ்வொரு போட்டியாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றனராம்.

காதல் பறவைகள் யார்?
ஆனால், இம்முறை கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களில் பார்வையாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது யாரைத் தெரியுமா? எஸ், உங்கள் யூகம் சரிதான். கடந்த முறை போலவே, இம்முறையும் அவ்வீட்டில் காதல் பறவைகளாக வலம் வரப்போகிறவர்கள் யார் என்பது தான் பலரது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓவியாவின் காதல்:
கடந்த முறை ஆரவைக் காதலித்த ஓவியாவால் பிக்பாஸ் வீடே கலர்புல்லாக இருந்தது. எனவே, இம்முறையும் நிச்சயம் இதே போன்று திருமணமாகாத இளம் நாயகன், நாயகி போட்டியாளராக இடம் பிடிப்பார் எனத் தெரிகிறது. அவர்கள் யார் என்பது தான் பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வமே. இன்னும் ஒரு வாரத்தில் யார் அந்த காதல் புறாக்கள் என்பது இலைமறைகாயாக தெரிந்து விடும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications