பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி படத்தில் நடித்த அஸ்வின் ராஜா! இந்த நடிகரின் மகனா?
சென்னை: கும்கி படத்தில் நடித்த நடிகர் அஸ்வின் யாருடைய மகன் தெரியுமா?
2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான படம் கும்கி. இந்த படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அஸ்வின் ராஜா. இந்த படத்தில் நடித்தது மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
இவர் யார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தயாரிப்பு நிறுவனத்தில் கே முரளிதரன், ஜி வேணுகோபால் ஆகியோரும் பார்ட்னர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனம் சார்பில் 1996 ஆம் ஆண்டு கோகுலத்தில் சீதை, 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. வி சுவாமிநாதன் தனது படங்களில் எப்போதாவது கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இது யார் சொத்து, இது உங்கள் சொத்து என்ற காமெடியில் வடிவேலுவுடன் பஸ் கண்டக்டராக நடித்தவர் சுவாமிநாதன். 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடம்பதித்தது இந்த நிறுவனம்.

அன்பே சிவம் படத்தை தயாரித்தவர் சுவாமிநாதன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். தமிழ் திரைப்பட துறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாமிநாதன் முதல் நபர் ஆவார். மகன் அஸ்வின் ராஜா தனது தோழி வித்யாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். அவர் மருத்துவராக பயிற்சி பெற்று வருகிறார். அஸ்வின் ராஜா பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பால்பாண்டி கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.
இவர் திகில் படமான மகாராணி கோட்டையில் 2015 இல் நடித்திருந்தார். அது போல் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க தயங்க மாட்டேன் என நேர்காணலில் கூட இவர் தெரிவித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு ஜாக்பாட், தனுசு ராசி நேயர்களே, சென்னை 2 பாங்காக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆர்யா, தனுஷ், சந்தானம், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்துள்ளார். அஸ்வினின் மனைவி கே கே நகரை சேர்ந்தவர். அமெரிக்காவில் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications