யார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல், அழகு சீரியல் ரெண்டிலும் ஒரே மாதிரி சூழ்நிலை ரெண்டு பொண்ணுகளுக்கு வந்திருக்கு. எப்படி அதை சமாளிக்கறாங்கன்றது அவசியமான ஒண்ணு.
கல்யாண வீடு சீரியலில் கோபியோட தங்கச்சி அனுசூயாவை புருஷன் ராம் விட்டுட்டு, வேற ஒரு பொண்ணு கூட குடும்பம் நடத்தறான். அவளுக்கு திருட்டு தாலியும் கட்டிடறான்.
இந்த நேரத்துல ராமின் திருட்டு தாலி கட்டிக்கிட்ட மனைவி பிள்ளை உண்டாகி இருக்கா. அவளை உள்ளங்கையில் வச்சு தாங்கற மாதிரி தாங்கறான். குழந்தையை பத்தியே எப்போதும் பேசிகிட்டு இருக்கான்.இதை வேலைக்கார அம்மா பார்த்துகிட்டே இருக்காங்க.

அட்வைஸ்
ராம் உங்களுக்காக என்னம்மா செய்து வச்சிருக்கார்.. பிள்ளை உண்டானதில் இருந்து அவர் உங்ககிட்ட காட்டற பாசம் நடிப்பு மாதிரிதான் எனக்கு தெரியுது. 10 வருஷமா கட்டின பொண்டாட்டிகூட வாழ்ந்துட்டு, ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு சுலபமா விட்டுட்டு வந்துட்டார்.

வரைக்கும்தான்
குழந்தை பெத்துக்கற வரைக்கும்தான் பொம்பளைங்க ஆம்பிளைங்க கண்ணுக்கு அழகா தெரிவாங்க. இப்போ அவன் தன் பொண்டாட்டியை பிடிக்கலேன்னு உங்க அழகுல மயங்கித்தான் உங்களை தேடி வந்திருக்கான். அதுக்கப்புறம் உங்களுக்கு அழகு போயிருச்சுன்னு வேற பொன்னைத் தேடி போக மாட்டான்னு என்னம்மா நிச்சயம்னு கேட்கறா.

அண்ணன்
அனுசூயாவுக்காவது அண்ணன், குடும்பம்னு இருந்தாங்க. அவங்க தாங்கிப் புடிச்சுக்கிட்டாங்க. உங்களுக்கு யாரும்மா இருக்காங்க... அந்தாளு உங்க பேரில் நிலம் எதுவும் எழுதி வைக்கல.. பணமும் டெபாசிட் பன்னலை.. வாழ்ந்த வரைக்கும் சாப்பிட்டோம் அவ்ளோதான்.. இந்த ஆளை நம்பாதீங்கன்னு சொல்லிட்டு போறாங்க.

இன் சங்கவி
அழகு சீரியலில் மதனோட அம்மா காவ்யாவை கல்யாணம் செய்து வைக்கறதேன்னு சொல்லிட்டு, மதன் மனசை மாத்தி சங்கவிக்கு பேசி முடிச்சுடறாங்க. நிச்சயதார்த்தமும் முடிஞ்சிருச்சு. நடந்து போயிகிட்டு இருந்த காவ்யாவின் பக்கத்துல போயி காரை நிறுத்தறா சங்கவி. உன்னை மதனுக்கு சுத்தமா பிடிக்கலை.. அதனாலதான் அவன் மனசுலேர்ந்து நீ அவுட், நான் இன் அப்டீன்னு வசனம் பேசறா..

ஏன் அவுட்
மதன் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சான். நான் கல்யாணம் செய்துக்கலேன்னா செத்துருவேன்னு மிரட்டினான். நான் இல்லேன்னா அவனுக்கு வாழ்க்கையே இல்லேன்னு சொன்னான்.அப்படி இருந்தவனை அவங்க அம்மா மனசை மாத்தி, என்னை வெறுக்க வச்சதுனாலதான் நான் அவுட், நீ இன்.

யோசிச்சு பாரு
நீயே யோசிச்சு பாரு.. நாளைக்கு வேற ஏதாவது பிரச்சனை வந்து, மதன் அம்மா உன்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லி, அதை மதன் நம்பி அப்போ அவன் உன்னை விட்டு போகமாட்டான்னு என்ன நிச்சயம். அப்போ நீ அவுட், வேற பொண்ணு இன்..அதனால.. அதை பத்தி எனக்கு எதுவும் கவலையில்லைன்னு சொல்றா காவ்யா.
ரெண்டு சீரியலிலும் பெண்களுக்கு புத்தி சொல்றமாதிரியான ஒரு சூழ்நிலையை கையாண்டு இருக்கு. பார்ப்போம், ரெண்டு பொண்ணுங்களும் என்ன முடிவெடுக்கறாங்கண்ணு ..
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications