கேன்சர் பாதித்த குழந்தைகளையும் ஜெயிச்சிட்டோம் மாறானு சொல்ல வைத்த மைம் கோபி! யார் இவர்? அதென்ன மைம்?
சென்னை: புற்றுநோய் பாதித்த குழந்தைகளை விமானத்தில் தனது சொந்த செலவில் அழைத்து சென்று அவர்களை பரவசப்படுத்திய நடிகர் மைம் கோபி. யார் இவர்?
மைம் கோபி 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முழு பெயர் கோபிநாத் ஆகும். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவர் 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் என்ற படத்தில் அறிமுகமானார். பார்ப்பதற்கு பழைய நடிகர் சரண்ராஜ் போல் அழகாக இருப்பார். அவர் புற அழகை போல் அகமும் அழகுதான். இவர் சில படங்களில் நடித்து வந்தாலும் 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் எனும் படத்தில் நடித்த போதுதான் பிரபலமடைந்தார்.
அது போல் கபாலி படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சுந்தரி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அது போல் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவரது சமையலை செஃப்கள் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் பாராட்டினார்கள். அந்த அளவுக்கு நல்ல நல்ல டிஷ்களை சமைத்திருந்தார். ஏற்கெனவே நடந்த 3 சீசன்களில் பெண்களே வின்னர் பட்டத்தை பெற்ற நிலையில் குக் வித் கோமாளியில் பட்டம் வென்ற முதல் ஆண் என்ற பெருமையை பெற்றார்.
இந்த சீசனில் மைம் கோபி ரூ 5 லட்சம் பரிசுத் தொகையாக பெற்றார். அந்த பரிசுத் தொகையை முழுவதுமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடுவதாக அந்த மேடையிலேயே அறிவித்திருந்தார். அந்த வகையில்தான் சென்னை அண்ணாநகரில் உள்ள தேன்மொழி நினைவு அறக்கட்டளையுடன் சேர்ந்து வான் உலா என்ற பெயரில் புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றார்.
சென்னையிலிருந்து பெங்களூர் வரை அவர்களை தனது சொந்த செலவில் அழைத்துக் கொண்டு சென்று வந்தார். மைம் கோபியின் இந்த மனிதநேய செயலை நிறைய பேர் பாராட்டினார்கள். இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து மைம் கோபி கூறுகையில் இது வெறும் தொடக்கம்தான்.
இன்னும் 3 மாதத்தில் வேறொரு விஷயத்தை செய்ய போகிறேன், குழந்தைகளுக்காக பிரத்யேகமான நூலகத்தையும் தொடங்க போகிறேன். எல்லாரையும் சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் அதிகமானால் ஆயுளும் அதிகமாகும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.
மைம் கோபி குக் வித் கோமாளியில் அட்வான்டேஜ் ரவுண்டில் ஏதாவது வென்றாலே அதை கஷ்டத்தில் இருக்கும் சக கலைஞர்களுக்கு கொடுத்துவிடுவார். பாலாவும் நிறைய பேருக்கு உதவுவதை அறிந்த மைம் கோபி, தனக்கு பரிசாக கிடைத்த மின்சாதனங்களை பாலாவிடம் கொடுத்து அவருக்கு தெரிந்த ஆசிரமத்தில் கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.
அந்த ஆசிரமத்திற்கு அந்த மின் சாதன பொருட்கள் தேவைப்படுவதாக ஒரு முறை பாலா, மைம் கோபியிடம் சொன்னாராம். அதை ஞாபகம் வைத்துக் கொண்டு குக் வித் கோமாளி செட்டிலேயே மைம் கோபி செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இவர் சரவணன் மீனாட்சி சீசன் 1 சீரியலில் மிர்ச்சி சரவணனுடன் நடித்திருந்தார். அதன் பிறகுதான் திரைத்துறைக்கு வந்திருந்தார். நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஸ்டூடியோ வைத்துள்ளார். மிக சிறந்த நடிப்பாளி. குக் வித் கோமாளியில் கூட இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. இவரது ஸ்டூடியோ பெயர் ஜி மைம் ஸ்டூடியோ அதனால்தான் இவரது கோபி என்ற பெயருக்கு முன்னால் மைம் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. தனது பிறந்தநாளை கூட மக்களுக்கு உதவி செய்யும் வகையில்தான் கொண்டாடுவார். பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் வந்தோம், சென்றோம் என இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications