சர்ச்சைகளை விடுங்க! கனவுக்கன்னி நடிகை ஓவியாவுக்கு திருமணமாகிவிட்டதா? இணையத்தில் தேடும் ரசிகர்கள்
சென்னை: நடிகை ஓவியாவுக்கு திருமணமாகிவிட்டதா? திருமணம் குறித்து அவருடைய எண்ணம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓவியா, இங்கு தமிழக மக்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்.
ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரை கொண்டவர் ஓவியா. இவர் கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர். இவர் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிரித்விராஜ் சுகுமாரனுடன் கங்காரு என்ற படத்தில் தனது 16 ஆவது வயதில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸானது.

புதிய முகம், அபூர்வா ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இந்த இரு படங்களை முடித்த அவர் விமலா கல்லூரியில் பிஏ ஆங்கிலம் பயின்றார். இதைத் தொடர்ந்து களவாணி என்ற படத்தில் நடித்தார். சிறிய பட்ஜெட் படங்களில் கூட ஓவியா நடித்திருந்தார்.
அது போல் இவர் கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததை பாக்கியமாக கருதுவதாக தெரிவித்த ஓவியா, இந்த படம் ரிலீஸானதும் தனது பெரும்பாலான காட்சிகள் எடிட் செய்யப்பட்டதாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
3 ஆண்டுகள் கழித்து மெரினா படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படம், சில்லுனு ஒரு சந்திப்பு, புலிவால், யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு ஓவியா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிந்து மாதவி, ரைசா, கணேஷ், ஆரவ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதில் ஆரவை அவர் ஒரு தலையாக காதலித்தார். அந்த நிகழ்ச்சியில் காதலை சொன்ன போது தனக்கு ஒரு காதலி இருப்பதாக ஆரவ் தெரிவித்ததை அடுத்து மன வேதனை அடைந்தார். அதுவரை ஆரவ்- ஓவியா வரும் காட்சிகளை ரசிகர்கள் ரசித்தனர். அதே வேளையில் காயத்ரி, நமீதா, சக்தி ஆகியோரால் ஓவியா மனதளவில் துன்புறுத்தப்பட்டார்.
இதனிடையே தன்னை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அவர் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். இது போலீஸ் கேஸானது. இதையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஓவியா அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.
இவர் மீண்டும் பிக்பாஸ் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு அதில் விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார். மேலும் தன்னை அந்த வீட்டில் துன்புறுத்திய சக்தி, ஜூலியை பொதுமக்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அவர் மட்டும் அந்த வீட்டை விட்டு செல்லாமல் இருந்திருந்தால் அவர்தான் டைட்டில் வின்னராகி இருப்பார்.
ஓவியாவுக்கு திருமணமாகிவிட்டதா என நிறைய பேர் இணையத்தில் தேடி வருகிறார்கள். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் எனக்கு திருமணத்தின் மீதும் லிவிங் டூ கெதர் மீதும் நம்பிக்கை இல்லை, எனவே நான் தனியாகவே வாழ விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications