Vishal Sai Dhanshika: நடிகர் விஷாலை கரம்பிடிக்க போகும் தஞ்சாவூர் பொண்ணு! யார் அந்த சாய் தன்ஷிகா?
சென்னை: நடிகர் விஷாலை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் நடிகை சாய் தன்ஷிகா யார் என்பதை பார்க்கலாம். 12 வயது வித்தியாசத்தில் நடக்கும் இந்த திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. எனினும் மேஜரானவர்கள் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்வதில் என்ன தவறு என்ற கேள்வியும் எழுகிறது.
பேராண்மை எனும் படத்தில் 2009 ஆம் ஆண்டு சாய் தன்ஷிகா நடிக்க வந்தார். அவர் மாஞ்சா வேலு என்ற படத்தில் 2010 இல் நடித்திருந்தார். அதே ஆண்டில் வெளிவந்த நில் கவனி செல்லாதே என்ற படத்திலும் அவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் அரவாண், பரதேசி ஆகிய படங்கள் மூலம் சாய் தன்ஷிகா பிரபலமடைந்தார். மேலும் கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சண்டை காட்சிகளில் அசத்தியிருப்பார். கபாலியில் அவரது ஹேர்ஸ்டைல் அதிகமாக பேசப்பட்டது. தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தன்ஷிகா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
வலிமையான கதாபாத்திரங்கள்
தான் நடித்த படங்களில் சும்மா 4 பாடலுக்கு ஹீரோவுடன் நடனமாடும் வகையில் அமைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் வலிமையான ரோல்களாக தேர்வு செய்திருந்தார். அந்த வகையில் யோகி டா படம் ஏற்கெனவே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சாய் தன்ஷிகா- விஷால்
அது மட்டுமல்லாமல் சாய் தன்ஷிகா, ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலை திருமணம் செய்யவிருப்பதாக யோகிடா இசை வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார். இவர் பிலிம்பேர் அவார்ட் சவுத் என்ற இரு விருதுகளை பெற்றுள்ளார். லாபம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோல் செய்தார்.
அரவான் படம்
2012 ஆம் ஆண்டு அரவான் படத்திற்காக எடிசன் விருதுகளையும் 2013 ஆம் ஆண்டு பரதேசி படத்திற்காக விஜய் விருதுகளையும் 2016ஆம் ஆண்டு கபாலி படத்திற்காக பிலிம்பேர் விருதுகளையும் 2019ஆம் ஆண்டு இருட்டு படத்தில் வில்லி கேரக்டருக்காக ஆனந்த விகடன் சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார்.
தஞ்சை
சாய் தன்ஷிகா தஞ்சாவூரை சேர்ந்தவர். அழகாக தமிழ் பேசுவார். இவர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் 17 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து வருகிறார்.
எப்போது கல்யாணம்
பொதுவாக விஷால் எப்போது பிரஸ் மீடியாவை சந்தித்தாலும் அவரிடம் எப்போது திருமணம் என்ற கேள்விதான் வந்து விழும். அவரும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி சமாளித்துவிட்டு செல்வார். மதகஜராஜா, ஆம்பள, சண்டக்கோழி உள்ளிட்ட பட வெளியீட்டு விழாக்களிலும் இந்த கேள்வி வந்து விழுந்தது.
திருமணம்
அப்போதெல்லாம், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்தவுடன்தான் என் திருமணம் குறித்து யோசிப்பேன் என சொல்லி சமாளித்து வந்தார். இந்த நிலையில் அண்மையில் நடந்த ஒரு விழாவில் அவரிடம் திருமணம் குறித்து கேட்ட போது, பெண் பார்த்தாகிவிட்டது. காதல் திருமணம்தான். அந்த பெண் யார், திருமணம் எப்போது என்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
யார் அந்த பொண்ணு
இந்த நிலையில் நேற்று காலை முதலே யார்ரா அந்த பொண்ணு என்ற கேள்வி எழுந்தது. அப்போது அரசல் புரசலாக அது சாய் தன்ஷிகா என சொல்லப்பட்டது. ஆனால் மாலை நடந்த யோகிடா படத்தில் அதை தன்ஷிகாவே உறுதிப்படுத்தினார். வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.
கண்ணு பட போகுது
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்னும் இரு மாதங்களுக்கு சுதந்திரமாக திரியலாம்னு நெனச்சேன். ஆனால் நானும் விஷாலும் லவ் பண்ற செய்தியை யார் கொடுத்தாங்கன்னு அந்த நபரை தேடிகிட்டு இருக்கேன் என்றார். மேலும் காதல் எப்படி வந்தது என்பது குறித்து கேட்ட போது, திருமண அறிவிப்பு கொடுத்தாச்சு, யார் மாப்பிள்ளை என்பதும் தெரிவித்துவிட்டேன். எல்லாவற்றையும் இப்போதே சொன்னால் கண்ணு பட்டுடப் போகுது என சிரித்தபடியே சொன்னார்.












Click it and Unblock the Notifications