மரியாவுக்கு ஷாரிக் முத்தம் கொடுத்ததை விடுங்க! 3 வயசிலேயே ரியாஸ் கான் மகன் எப்படிப்பட்டவர்னு பாருங்க!
சென்னை: நடிகர் ரியாஸ் கான், நடிகை உமா ரியாஸ் கானின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இன்று அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெறுகிறது.
கேரளத்தை சேர்ந்தவர் ரியாஸ் கான். இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஒரு பாடிபில்டர். இதற்கான அகாதெமியையும் இவர் நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக அடிக்கடி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அண்மையில் கூட துபாய் சென்றிருந்தார்.

நடிகை கமலா காமேஷ் மகள் உமாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன், சம்ருத் ஹாசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஷாரிக்கிற்குத்தான் இன்று திருமணம் நடைபெறுகிறது.
இவர் மரியா ஜெனிபர் என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். தற்போது அவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதால் திருமணம் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் ஹல்டி மற்றும் மெகந்தி விழாக்கள் நடந்து முடிந்தன. இதில் மணமகன் ஷாரிக், மணமகள் மரியாவுக்கு முத்தம் கொடுத்தார். இருவரும் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்தனர்.
இந்த நிலையில் ஷாரிக் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பார்ப்போம். சிறுவயது முதலே ஷாரிக்கிற்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடித்த பென்சில் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு இவர் பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவிற்கு வந்தார்.
2ஆவது சீசனில் கலந்து கொண்ட அவர் வீட்டின் மீதான நினைவு காரணமாக (ஹோம் சிக்) சரியாக விளையாட்டில் கவனம் செலுத்தாமலும் ரசிகர்களை கவராமலும் 49ஆவது நாளிலேயே ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார். அது போல் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்த ஷாரிக் 21 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.இந்த பிக்பாஸ் மூலம் ஷாரிக்கிற்கு டான், ஜிகிரி தோஸ்து உள்ளிட்ட படங்கள் வந்தன. இதுதவிர அவர் வெப் சீரிஸ் மற்றும் மியூசிக் ஆல்பங்களிலும் பங்கேற்றார்.
தந்தை ரியாஷ் கானை போல் பாடி பில்டிங்கில் அதிகம் ஆர்வம் ஷாரிக்கிற்கு இருக்கிறது. தீவிர பயிற்சி மூலம் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார் ஷாரிக். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவர் மார்ஷியல் ஆர்ட்ஸிலும் திறமையானவராம். இது தவிர பாக்ஸிங் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
ஷாரிக் 3ஆவது படிக்கும் போதே கால்பந்து விளையாட தொடங்கியுள்ளார். கால்பந்து தன்னை சுறுசுறுப்பாக வைத்திருப்பதாக கூறுகிறார். இது தவிர ஷாரிக் தேசிய அளவிலான தடகள வீரரும் ஆவார். நடிகர் ரியாஸ் கான் மலையாளத்தில் பேசிய ரீல்ஸ் வைரலாகி வருகிறது. அதில் மகனுக்கு கல்யாணம், கறி சோறு கள்ளு எல்லாமே இருக்கு வாங்க என அழைப்பு விடுக்கிறார். அதில் மணப்பெண் மரியா, கையில் மது பாட்டிலுடன் தோழிகளுடன் பார்ட்டி செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தற்போது வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications