குக் வித் கோமாளி சீசன் 5! தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! முதல் எலிமினேஷன் இவரா? சோகத்தில் ஃபேன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா?

விஜய் டிவியில் சமையலை முன் வைத்து காமெடியும் கலகலப்பும், விறுவிறுப்பும் கலந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.

who is the First elimination from Cook with comali season 5

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்த நிலையில் 5 ஆவது சீசன் தொடங்கியது. முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டும் தாமுவும் நடுவர்களாக இருந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் 5ஆவது சீசனில் வெங்கடேஷ் பட் வெளியேறினார்.

அவர் சன் டிவிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநரும் சன் டிவிக்கு சென்றுவிட்டனர். அங்கு டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தயாரித்து அது இன்று முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. வெங்டேஷ் பட் வெளியேறியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

அப்போது தாமுவும் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இல்லாமல் போனது. தாமு விஜய் டிவியிலேயே இருக்கிறார். எனவே வெங்கடேஷ் பட்டுக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக கமிட் ஆகியுள்ளார். அது போல் கடந்த 4 சீசன்களை ரக்ஷன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனை ரக்ஷனுடன் மணிமேகலையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டியாளர்களாக அக்ஷய் கமல், சுஜிதா, ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, விடிவி கணேஷ் , இர்ஃபான், திவ்யா துரைசாமி, ஷாலின் சோயா, நடிகர் வசந்த், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அது போல் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்னம், அன்சிதா, வினோத், ஆகியோர் இணைந்துள்ளனர்.

அவர்களுடன் புகழ், குரேஷி, தங்கதுரை, சுனிதா உள்ளிட்டோரும் உள்ளனர். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது. முதல் வாரம் சுஜிதா செஃப் ஆப் தி வீக் வாங்கினார். அதன் பிறகு வசந்த் , அக்ஷய் கமல் ஆகியோரும் செஃப் ஆப் தி வீக் வாங்கினர்.

who is the First elimination from Cook with comali season 5

இந்த நிலையில் நேற்றைய தினம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் சுவாரஸ்யத்திற்காக நடிகை ராதா விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் முதல் மரியாதை படத்தில் வரும் பூங்காற்று திரும்புமா என்ற பாடலை தாமு பாட, ராதா ஆட ஒரே கலாட்டாவாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா ஆகியோர் டேஞ்சர் சோனுக்கு வருகிறார்கள். இவர்களில் சோயா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளாராம். இதை அவரே தன் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் நான் பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த குக் வித் கோமாளி மூலம்தான் பெயரும் புகழும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். சோயாவின் கையை பிடித்து புகழ் ரொமான்ஸ் செய்வது போல் நடித்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டுவது டிடிஎஃப் வாசனுக்கு எரிச்சலை கிளப்புகிறது.

என் காதலியின் கைகளை பிடித்துக் கொண்டு புகழ் ஏன் இப்படி செய்கிறார் என்று கூட ஒரு முறை கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் சோயா, அந்த செட்டில் தங்கதுரையை மரியாதை இல்லாமல் பேசியதை எல்லாம் ரசிகர்கள் விரும்பவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+