Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவக்குமாருக்கு சிவாஜி சொத்து போகக்கூடாது? வாரிசை வஞ்சித்த ராம்குமார்? ஸ்ரீபிரியா பாவம்: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸில் சிவக்குமாரின் எலிமினேஷன் அநியாயம் என்று சிலர் பதிவிட்டு வரும்நிலையில், சிவக்குமார் குறித்த சில தகவல்களை மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "பிக்பாஸ் சிவக்குமார் விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே கசிந்து கொண்டிருக்கிறது.. சிவாஜி கணேசன் மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மாதிரி நடந்து கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்... ஏனென்றால், ஏற்கனவே மனைவி இருந்தபோதும், ரகசியமாக வெளிஉலகில் மனைவி என்றே சொல்லாமல், சாவித்திரியுடன் வாழ்ந்து வந்தார். ரகசிய வாழ்க்கையை வாழ்ந்தார்.

television sivakumar sripriya

பிரபு - குஷ்பு: ஆனால், சிவாஜி அப்படியில்லை.. ஒரே மனைவியுடன், தன்னுடைய குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர்.. பிரபு, குஷ்பு விவகாரம்கூட, எல்லாருக்கும் தெரியும்.. ஒருமுறை ஏர்போர்ட்டில் "நான் மிசஸ் பிரபு" என்றே குஷ்பு சொன்னார்..

ஆனால், ராம்குமாரை இப்படி யாருமே நினைக்கவில்லை.. ஸ்ரீபிரியாவின் சகோதரியுடன் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது.. இதை வெளிப்படையாக சொல்வதில் என்ன இருக்கு? இப்போது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது சிவக்குமார், ராம்குமாரின் மகன்தான் என்று. எனினும் சொத்து காரணமாகவே, சிவக்குமாரை ஏற்க மறுப்பதாக தெரிகிறது.

சிவக்குமார்:
சிவாஜி சொத்துக்கள் விஷயத்துக்குள் நாம் நுழைய வேண்டாம். ஆனால், ராம்குமாருக்கென்று சொத்துக்கள் இருக்குமே? அதை சிவக்குமாருக்கு தரலாமே? நோய்வாய்ப்பட்டுள்ள சிவராஜ்குமார் தன்னுடைய சொத்துக்களை வாரிசுகளுக்கும், தன்னுடைய மூதாதையர் சொத்துக்களை அனாதை ஆசிரமத்துக்கும் என அறிவிக்கிறார். அதுபோல ராம்குமார் ஏன் சொல்லவில்லை?

அப்படியானால் ராம்குமாரிடம் சொத்துக்கள் இல்லையா? சிவராஜ்குமார் சினிமாவில் உழைக்கிறார், சம்பாதிக்கிறார்.. ராம்குமார் சிவாஜி சொத்தை உட்கார்ந்து சாப்பிடறார் போல. அவருக்கென்று எந்த சொத்தும் இல்லையா? அப்பா சொத்து என்பதால், அதில் தரமுடியாது என்று இருக்கிறாரா தெரியவில்லை. ஆனால், பிரபு உழைத்து கொண்டே இருக்கிறார்.. அதனால் அவரை நான் சொல்லவில்லை.

வஞ்சிப்பது பாவம்: ஒரு பெண்ணுக்கு நம்பிக்கையை தந்து சிதைத்து, அவருடைய வாரிசையும் வஞ்சிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை இது? சமூகத்தில் அந்த பிள்ளையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? சிவக்குமாரை பார்க்கவே பரிதாபமாக இருக்கு.. உயர்ந்த குடும்பத்தில் இருந்துகொண்டு, எல்லாரும் மதிக்கக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு ராம்குமார் இப்படி செய்வது சரியில்லை.. சிவக்குமாரை மகனாக ஏற்றுக் கொள்ளலாம். அதில் தவறில்லை.. ஏற்கனவே சிவக்குமாரை ஏற்றுக் கொண்டிருந்தால், இது வெளியே தெரியாமலேயே போயிருக்கலாம்.

யாருமே 2 மனைவியுடன் சினிமா உலகில் வாழலியா? பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, பெரிய குடும்ப பிள்ளை என்றால், என்ன வேணும்னாலும் செய்வீங்களா? சிவக்குமாருக்கே இன்னிக்கு இவ்வளவு சிக்கல் என்றால், நாளை அவரது மகனுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வரும்?

அடிபடும் சிவாஜி பெயர்: இப்போது சிவக்குமார் என்றாலே, ராம்குமார் பெயரைவிட, சிவாஜி பேர்தான் இங்கே அசிங்கமாகிறது.. நீங்கள் என்னதான் மறைத்தாலும், சிவாஜியின் பெயர்தான் அடிபடுகிறது.. சொத்து காரணமாகவே, சிவக்குமாரை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. சிவாஜிக்கு 500, 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கலாம். இதில் சிவக்குமாருக்கு அங்கீகாரம் தந்தால், சிவாஜியின் புகழ் டேமேஜ் ஆகாமல் இருக்கும்.

ஸ்ரீபிரியாவை பொறுத்தவரை, பலபேரை இதற்கு முன்பு காப்பாற்றியிருக்கிறார். மிகவும் உறுதியான பெண். ஒருமுறை ரஜினியையே காப்பாற்றியவர் ஸ்ரீபிரியா. அதற்கு காரணம், ரஜினியுடனான நட்புதான். மதுபோதை காரணமாக, மனநலம் பாதிக்கப்பட்டபோது, ரஜினியை உரிமையோடு பாதுகாத்து, காப்பாற்றியது ஸ்ரீபிரியாதான்.

ராம்குமார்: ஆனால், சொந்த குடும்பத்தில் நிலைமை எப்படியிருந்தது என்று சொல்ல முடியாது. ஒருவேளை அக்கா - தங்கைகள் இடையே இடைவெளி இருந்ததா? அல்லது ஸ்ரீபிரியா உதவி செய்ய போனபோது, அக்கா அந்த உதவியை தடுத்தாரா? அல்லத ஸ்ரீபிரியாவிடம் உதவி கேட்கவில்லையா? அல்லது ஸ்ரீபிரியா உதவி செய்யக்கூடாது என்று ராம்குமார் தரப்பில் எதிர்ப்பு வந்ததா? என எதுவுமே தெரியவில்லை. அதனால், இதை வெளிப்படையாக சொல்ல வேண்டியது ராம்குமார்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+