2 எழுத்து நடிகை.. "ஒழுக்கம் இல்லேன்னா பேசுவேன்".. பயில்வான் ரங்கநாதன் வீடியோ இப்படி ரவுண்டு கட்டுதே
சென்னை: நடிகர், நடிகைகள் குறித்து ஆதாரத்துடன் மட்டுமே பேசுவதாகவும், தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்களை பற்றி மட்டுமே தான் விமர்சிப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் உறுதியாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது.
சினிமா நடிகரும், சினிமா விமர்சிப்பவருமான பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து பரபரப்பு பேட்டிகளை தந்து வருகிறார்.. பெரும்பாலும் இவரது பேட்டிகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதாகவே அமைந்து வருகிறது.

டிவி நிகழ்ச்சிகள், சினிமா பிரமுகர்கள் வரை இவர் விமர்சிக்காத நபர்களே இல்லை எனலாம்.. தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாக போய்க்கொண்டிருக்கும் மணிமேகலை - பிரியங்காவின் விஜய் டிவி விவகாரமாகட்டும், ஜெயம்ரவி-ஆர்த்தியின் குடும்ப விவகாரமாகட்டும், எல்லாவற்றிலும் நுழைந்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
உரிமைகள்: ஆதாரம் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக்கூடாது, அவரவர் தனிப்பட்ட உரிமையில் தலையிடக்கூடாது என்ற பெரும்பாலான விமர்சனங்களுக்கு நடுவே, தன்னுடைய பாணி பேட்டிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.. அத்துடன், நடிகர், நடிகைகள் பற்றி நான் பேசுவது தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று உறுதியாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
ஒருமுறை, பயில்வான் ரங்கநாதனின் இந்த செயலுக்கு டான்ஸ் மாஸ்டர் கலா, கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.. "யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க.. நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கு.. தனிப்பட்ட விஷயத்தை சொல்வதால் யாருக்கு என்ன பலன்? மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் வரும் காசை வைத்து என்னதான் செய்ய போறீங்களோ? என்று காட்டமாக கேட்டிருந்தார்.
வேண்டுகோள்: சமீபத்தில் அறம் செய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும், குணா என்பவர் பேசும்போது, "பயில்வான் ரங்கநாதனுக்கு ஒரு வேண்டுகோள். சினிமாவில் சில விஷயங்கள் மாற வேண்டும்.. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை அப்லோட் செய்யலாம். அதுதொடர்பான விழிப்புணர்வை செய்யலாம். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்கலாமே" என்று நேரடியாகவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனாலும், பயில்வான் ரங்கநாதன் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.. 2 எழுத்து பிரபல நடிகை பற்றி தெரிவித்த தகவல்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடியாக யூடியூப் ஒன்றிலும் பேசியிருந்தார். இது சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் பேசி வெளியிட்டிருந்த வீடியோ போல் தெரிகிறது. ஆனால், தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனசாட்சி: அதில் பயில்வான் பேசும்போது, "நான் என்ன எல்லாரையுமா விமர்சிக்கிறேன்? தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களைத்தானே விமர்சிக்கிறேன்? தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும்.
ஆனால் சினிமாவில், தனி மனித ஒழுக்கம் என்பது 100க்கு 99 சதவீதம்கூட இல்லை. நான் யாரை பற்றி பேசினாலும், அதற்கான ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். அனுபவித்ததைதான் பேசுகிறேன்.. நான் பார்த்ததைதான் பேசுகிறேன்.. சினிமாவில் இருந்துட்டு, நீங்களே இப்படி சினிமாவை பேசலாமா? என்று கேட்கிறார்கள். சினிமாவில் இருந்தால், நான் அந்த குறையை சொல்லக்கூடாதா?
தனிமனித ஒழுக்கம்: வாய்ப்புக்காக தங்கள் ஆபாசப்படங்களை எத்தனையோ நடிகைகள், தங்களது சோஷியல் மீடியாவில் பதிவு செய்வதில்லையா? இது தனி மனித ஒழுக்கமா? ஆபாச படங்களை தாங்களே வெளியிடுவது தவறில்லை, ஆனால், நான் சொல்வது மட்டும் தவறா? அண்ணே அண்ணே என்று சொல்லிவிட்டு, இரவில் அத்தான், மாமாவாக மாறிவிடுவார்கள். இதை நான் சொல்லவில்லை, மூத்தவர் சொல்லியிருக்கார்.
அந்த டான்ஸ் மாஸ்டர், ஒரு நடிகையின் அம்மாவை கல்யாணம் செய்து விவாகரத்து செய்தவர். கம்பரசம் என்கிற நூலை அண்ணா எழுதினார். அதிலென்ன கம்பராமாயணத்தை குறை சொன்னாரா? ராமரை குறை சொன்னாரா? ராமாயணத்தில் உள்ள காம விசயங்களை மட்டும் சொல்லியிருந்தார்.. லட்சக்கணக்கில் அந்த புத்தகம் விற்றது.
டான்ஸ் மாஸ்டர்: என்னை குறை சொன்ன, அந்த டான்ஸ் மாஸ்டர் வீடியோவை 300 பேர் தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான் பேசியதை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். நீங்கள் டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறீங்க.. நாங்க யூடியூப்பில் பேசுறோம். எல்லாம் ஒன்னு தானே.
சினிமாவில் எல்லாருமே தப்பானவர்கள் கிடையாது. ஆனந்தராஜ், நதியா மாதிரி விதிவிலக்கானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. எத்தனையோ நடிகைகள், தங்களின் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பவேயில்லை. இதற்கெல்லாம் காரணம், அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் தான்..
தொடரும் தொடரும்: தனி மனித ஒழுக்கம் இல்லாத நடிகர், நடிகைகள் குறித்து நான் பேசுவது தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும். என்னை நீங்கள் குறை சொன்னால், குறை சொல்பவர்களின் 4 விரல்கள் உங்களை குறை சொல்லும்'' என்றெல்லாம் தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
நடிகை சுவலட்சுமி: இந்த வீடியோ வைரலாகி வரும்நிலையில், நடிகை சுவலட்சுமியை குறித்து, மதிப்பிற்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதும் வைரலாகி வருகிறது. அதில், "நடிகை சுவலட்சுமி பெரும்பாலான படங்களில் சேலை கட்டிக் கொண்டு போர்த்திக்கொண்டுதான் நடித்தார். எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் கவர்ச்சியாக நடிக்கவே இல்லை.
எத்தனையோ பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசியும், எதற்குமே அவர் அசரவில்லை.. கோகுலத்தில் சீதை படத்தில் நடித்தபோது, நடிகர் கார்த்திக் அவருக்கு பல ரூட்டு போட்டும், சுவலட்சுமி சிக்கவே இல்லை. பல நடிகர்கள் காதலிப்பதாக சொல்லியும் எல்லாத்துக்கும் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தவர் நடிகை சுவலட்சுமி" என்று பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசியிருப்பது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications