எம்ஜிஆர் அந்த நடிகரை ஜெயில்ல தள்ளியது தெரியுமா.. பூ நடிகை யாரது? மூத்த ஹீரோயினுக்கு சிக்கல்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொக்கைன் போதைப்பொருளுக்கு சினிமாவில் மட்டுமல்ல, கல்லூரி பெண்கள், மாணவர்கள், மேட்டுக்குடி நபர்களில் கையிலும் புழங்க துவங்கிவிட்டது... போதைப்பொருளை பயன்படுத்தியதாக பலரது பெயர்கள் உள்ளன.. இந்த பட்டியலில் பல நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள்.. இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் உள்ளது, சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "கொக்கைன் கால் கிலோ, நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தந்திருக்கிறார் பிரசாந்த்.. இந்த பிரசாந்த்திடம், கொக்கைன் பெற்ற கஸ்டமர்கள் யார்? அவரது பட்டியலிலுள்ள நடிகர்கள், நடிகைகள் யார் யார்? 3 எழுத்து நடிகை, 4 எழுத்து நடிகை, பூ நடிகை, மலர் நடிகை.. யார் இவர்கள் எல்லாம்?

Television senior actresses actor suman

ஈசிஆரில் நடக்கும் பார்ட்டிகளில், ராஜபோதை இல்லாத பார்ட்டிகளே கிடையாது.. இந்த பார்ட்டிகள் நடக்கும் இடங்கள் எங்கே உள்ளன? இதில் கலந்து கொண்டவர்கள் யார் யார்? வெள்ளித் தட்டில் கொக்கைன் தரப்படுவதாக பாடகி சுசித்ரா சொல்லியிருப்பதையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஏன் விசாரிக்கவில்லை?

ஒருவேளை, ஆளும் கட்சிக்கு நெருக்கமான நடிகர்கள், நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்களா? ஆந்திர மாநில நடிகர் கிருஷ்ணாவுக்கு, காவல்துறை தந்த சிகிச்சையை, மற்ற நடிகர்களுக்கு ஏன் தரவில்லை?

மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் யார்

ஸ்ரீகாந்த் தவறான தகவலை பதிவு செய்கிறார்.. எல்லா சினிமா நபர்களுமே போதை ஆசாமிகள் கிடையாது.. எத்தனையோ நல்ல நபரகள் உள்ளனர்.. எத்தனையோ நல்ல நடிகைகளும் இருக்கிறார்கள்.. நல்ல துணை நடிகர்கள், கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள் உள்ளனர்.. போதை ஆசாமிகளை மட்டும்தான் நாம் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. ஆனால், பிரசாத் தந்த லிஸ்ட்டை வைத்து ஏன் காவல்துறை தீவிரப்படுத்தவில்லை? கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துடன் அந்த லிஸ்ட் முடிந்துவிட்டதா?

ஒரு கிராம் கொக்கைன் 12 ஆயிரம் ரூபாய்.. தங்கத்தின் விலையே அவ்வளவு இல்லை.. ஒரு கிலோ 1 கோடியே 20 லட்சம் ஆகிறது.. இவ்வளவு விலை கொடுத்து சினிமாவில் வாங்கக்கூடியவர்கள் யார்? சினிமாவில் பணியாற்றும் ஏழைத்தொழிலாளர்கள் இதையெல்லாம் வாங்க முடியாது.

வயாக்ரா - சிறுமூளை அழியும்

கொக்கைன் போதையாகவும், வயாக்ராகவும் வேலை செய்யுமாம்.. அதனால்தான், இது ராஜபோதை என்கிறார்கள்.. கொக்கைன் பயன்படுத்தியபவர்களின் சிறுநீரை , 45 நாட்கள் கழித்து பரிசோதித்தால், அதில் போதை கலந்திருப்பது தெரியவருமாம். இந்த கொக்கைன் உடலை கெடுக்கக்கூடியது.. நரம்புகளை பாழ்படுத்தக்கூடியது.. சிறுமூளை அழிந்துவிடும்.. இதெல்லாம் மனிதனுக்கு மீட்கவே முடியாத விஷயங்கள்..

இந்த போதைப்பொருளுக்கு சினிமாவில் மட்டுமல்ல, கல்லூரி பெண்கள், மாணவர்கள், மேட்டுக்குடி நபர்களில் கையிலும் புழங்க துவங்கிவிட்டது... போதைப்பொருளை பயன்படுத்தியதாக பலரது பெயர்கள் உள்ளன.. இந்த பட்டியலில் பல நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள்.. இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் உள்ளது.

நடிகர் சுமன் - தண்டனை

எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்தபோது, குடித்துவிட்டு யாராவது சினிமாவில் கலாட்டா செய்தால், உடனே குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்துவிடுவார்.. பாலியல் வழக்கல், நடிகர் சுமனை அப்படித்தான் குண்டர் சட்டத்தில் அடைத்தார்.. அவரால் வெளியே வரவே முடியவில்லை.. தெலுங்கு திரைப்பட உலகமே வந்து கெஞ்சியது.. பல வருடம் சிறையிலிருந்துவிட்டுத்தான் வெசளியே வந்தார் சுமன்..

இப்போது எம்ஜிஆர் இல்லை. சினிமாவில்கூட மது, போதை வஸ்துவை பயன்படுத்துவர்களை திருத்தும்படியான காட்சிகளைதான் வைத்திருப்பார்.. மதுவை எக்காலத்திலும் ஆதரித்ததில்லை.. போதையை ஆதரித்ததில்லை.. எம்ஜிஆர், சிவாஜி காலத்துக்கு பிறகுதான், போதைக் கலாச்சாரமாகிவிட்டது..

யாரந்த மூத்த நடிகைகள்

இப்போது மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் வாரிசுகள், அதிகாரம் மிக்க கோடீஸ்வரர்களின் வாரிசுகளும் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்களாம்.. மூத்த நடிகைகள், முன்னணி நடிகைகளுக்கும் தொடர்புள்ளது என்கிறார்கள்..

பிரசாத் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தால், பலரது சினிமா வாழ்க்கையே முடிந்துவிடும்.. எனவே, பிரசாத்தை குண்டர் சட்டத்தில் வைத்து, வெளியில் சொல்ல முடியாதபடி காவல்துறை பாதுகாக்கிறதோ என்ற சந்தேகமும் பரவலாக எழுகிறது...எனவே, விழிப்புணர்வாக இருந்துதான், மக்களை மக்களே மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+