Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த சூப்பர் ஹீரோ? சென்னை ஓட்டலில் நம்பவே முடியலயே?.. அதைவிடுங்க, நடிகர் கவின் மாறணும்: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் உள்ள சிக்கலை தீர்க்கவே, சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் நீண்டகால ஸ்டிரைக் எடுக்க போகிறோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், அதை முறியடித்துவிட்டன சில சக்திகள்" என்று அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Madras Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "மக்கள் தியேட்டருக்கு வருவதற்கே காரணம், இரண்டரை மணி நேரம் என்ஜாய் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், வெடிகுண்டு, துப்பாக்கி, கடத்தல், கற்பழிப்பு போன்ற படங்களை தருகிறார்கள்.

Television Kavin Superhero

மதகஜராஜா, குடும்பஸ்தன்

இதுபோன்ற படங்கள் வேண்டாமா என்றால், கண்டிப்பாக வேணும்தான். அதை ரசிக்கவும் கூட்டம் இருக்கு, ஆனால், குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்க கூடியவாறு படங்கள் வரவேண்டும். அந்த ஏக்கத்தைதான், சமீபத்தில் மதகஜராஜா போக்கியிருக்கிறது.. அந்த படம் இவ்வளவு பெரிய ஹிட்டாயிருக்கு..

குடும்பஸ்தன் படமும் அப்படித்தான்.. கிட்டத்தட்ட வி.சேகர் டைப்போன்ற படம் அது. குடும்ப சிக்கல், காமெடியான படம்தான்.. சீரியலையும், வி.சேகர், படத்தையும் சேர்த்து, நவீன காலத்துக்கேற்றவாறு கொண்டுவந்து தந்துள்ளதுதான் அதன் சக்ஸஸ்.. அதில், மணிகண்டன் சரியாக பொருந்தியிருக்கிறார்.

மணிகண்டன் திறமைசாலி

மணிகண்டன் இயல்பாகவே ஒரு ஸ்கிரிப்ட் டைரக்டர், வருங்கால டைரக்டர் என்பதால், அவரால் இவ்வளவு அழகான கதையை தேர்ந்தெடுக்க முடிகிறது. அவரது ஒவ்வொரு படமும், ஒவ்வொரு விதமாக இருக்க காரணமே அதுதான். அவர் நினைத்திருந்தால், குடும்பஸ்தன் படத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், விதவிதமான படங்களை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பதே பெரிய விஷயம்தான்.

ஆனால், மணிகண்டனை சினிமா உலகம் கெடுக்காமல் இருக்கணும். காசு கொண்டுவந்து கோடிக்கணக்கில் கொடுத்து, துப்பாக்கியை தந்து 50 பேரை சுட்டுத்தள்ளு , 200 பேரை அடித்துப்போடு என்று சொல்லி படமெடுக்க வருவார்கள்., அந்தநேரத்தில், மணிகண்டன் உஷாராயிருக்க வேண்டும்.

எலிப்பொறியில் சிக்கின மாதிரி

இன்றைய தயாரிப்பாளர்கள், பெரிய அளவிலான பணத்தை கொட்டிவிட்டு, அதை திரும்ப எடுக்க முடியுமா? முடியாதா? என்று புலம்புவதற்கு, சின்ன பட்ஜெட்டில் எல்லாரும் ரசிக்கும்படியான படத்தை எடுத்து, குறைவான லாபத்தை எடுத்தாலே போதும். சில நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை.. தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் எலிப்பொறியில் சிக்கின மாதிரி ஆயிட்டாங்க..

சினிமாவில் உள்ள சிக்கலை தீர்க்கவே, சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் நீண்டகால ஸ்டிரைக் எடுக்க போகிறோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தார்கள். ஆனால், அதை முறியடித்துவிட்டன சில சக்திகள்..

ரஜினியே, ஒரு மேக்கப்மேன், 1 காஸ்ட்யூமர் என 2 பேருடன் மட்டும்தான் ஷூட்டிங்குக்கு வருகிறார். ஆனால், நேற்று வந்த நடிகர்கள், 8, 10 பேருடன் வருகிறார்கள். தங்களுக்கு பாதுகாப்புக்கு அவர்கள் தேவை என்கிறார்கள். சினிமாவை இப்படி அழிச்சிட்டுதான் இருக்காங்களே தவிர, வாழவைக்க ஒருசிலர் மட்டுமே உண்டு.

நடிகர் கவின் பற்றின கிசுகிசுக்கள்

நடிகர் கவின், லிப்ட் ரிப்பேர் என்றதால், திரும்பி சென்றுவிட்டதாகவும், விஜய்க்கு தந்த கேரவன்தான் தனக்கு வேண்டும் என்று கேட்பதாகவும் செய்திகள் வருகின்றன. மனித மனம் என்பது குரங்கு.. அது ஒருகட்டத்தில் தானாகவே திருந்திவிடும்.

ஒருமுறை விஜய்சேதுபதிக்கு அப்படி நடந்தது.. ஆரம்பத்தில் அவரது 2 படம் ஓடி, 3வது படமும் நன்றாக ஓடியது. அதற்காக அந்த படத்தின் பார்ட்டி லீ-மெரிடியன் ஓட்டலில் வைத்தார்கள்..

ரிசப்ஷனில் கலாட்டா செய்த நடிகர்

அந்த ஓட்டலில் சரக்கு போட்டுட்டு கலாட்டா செய்தார்.. ரிசப்ஷனில் உட்கார்ந்து பிரியாணி வேண்டும் என்று அடம்பிடித்தார். ரிசப்ஷனில் பிரியாணி தருவதில்லை என்று ஓட்டல் தரப்பில் சொல்லியும், அவர் கேட்கவில்லை. கலாட்டா செய்து, பிரியாணியை தூக்கி அடித்து, பெரிய பிரச்சனையாகிவிட்டது. பிறகு பவுன்சர்கள் வந்து, அவரை அழைத்து சென்றுவிட்டார்கள்..

அப்போது இதை நான் செய்தியாக எழுதியிருந்தேன்.. நான் எழுதியதை பார்த்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் அதை பெரிய செய்தியாக வெளியிட்டிருந்தனர்.. உடனே விஜய் சேதுபதி அந்த பத்திரிகை நிருபரை அழைத்து, "அண்ணே, அன்னைக்கு நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். தெரியாமல் நடந்த விஷயம், இனிமேல் அதை செய்ய மாட்டேன்" என்று சொன்னார். அதற்கு பிறகு தன்னை சரிசெய்து கொண்டார்.
எல்லாவற்றையும் சினிமா மாற்றும்

ஏனென்றால், திடீர் வெற்றி என்பது, இப்படியான மிதப்பை தரும். பிறகு, ஐய்யய்யோ இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும்போது ஒரு வெட்கம் வரும்.. அந்த வெட்கம் வரும்வரை, கவினும் அப்படித்தான் இருப்பார். ஒருகாலட்டத்துக்கு பிறகு, இதெல்லாம் ஒன்னுமேயில்லை என்ற எண்ணம் அவருக்கும் வரும். ஆனால், அது கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நல்லா இருக்கும். கவின் மட்டுமல்ல, கவினை போல பலர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் சினிமா மாற்றும்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+