யாருய்யா இந்த "மொட்டை" சுரேஷ்.. வலை வீசி தேடும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாளர்கள் பெரிய அளவில் புகழ் பெற்று விடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியும் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரும் ரசிகர்களிடம் எளிதாக பாப்புலர் ஆகிவிடுகிறார்கள். அதுவரைக்கும் யார் என்றுகூட தெரியாமல் இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மனதில் தெரியும் அளவில் ரீச் ஆகி விடுகிறார்கள்.
அதற்காகவே பலர் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரிதான் பலருக்கும் தெரியாமல் இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது யார்யா எந்த சுரேஷ் சக்கரவர்த்தி என்று தேடும் அளவிற்கு டிரண்ட் ஆகி கொண்டிருக்கிறார்.

கோபக்காரர்
இந்த சீசனில் ஒவ்வொரு தடவையும் ஒருவரை கோபக்காரர்கள் ஆக அனுப்பி வைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி இந்த சீசனிலும் சுரேஷ் சக்கரவர்த்தி - அனிதா சம்பத் இருவருக்கும் சண்டை பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது. அதையே ப்ரமோவில் போட்டுப்போட்டு டிஆர்பி கூட்டி வருகிறார்கள். அனிதா சம்பத்திற்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது . அவர்கள் யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி நம்ம தலைவியை திட்டி விட்டார் என்று போர்க்கொடி தூக்கி கொண்டு வருகிறார்களாம்.

வாய்ச்சண்டை
இருவருக்குள்ளும் அந்த அளவிற்கு மனஸ்தாபங்கலோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சண்டையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி பன்முக தன்மையுடைய நடிக,ர் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் பணியாற்றியவர் . 1991 ஆம் ஆண்டு கே பாலச்சந்தரின் அழகன் படத்தில் அறிமுகமானார்.

மம்முட்டியுடன் நடிப்பு
அழகன் ந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் நடித்திருந்தார் . பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார். அதுமட்டுமல்லாமல் சமையல் கலைஞருமான இவர் ஒரு யூடியூப் சேனலில் பல சமையல் செய்து அசத்தி வருகிறார் . அதேபோல் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு இவர் இந்த வாரம் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் செய்திவாசிப்பாளர்களை அவமதித்ததாக சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத் சண்டையிட்டு வருகின்றனர்.

இப்படி பேசலாமா
தன்னை மற்றும் செய்தி வாசிப்பாளர்களை சுரேஷ் அவமதித்ததாக அனிதா குற்றம்சாட்டினார் .அதை பிக் பாஸ் தமிழில் சமீபத்தில் இவர்கள் இருவரின் சண்டையும் பெரிதாகி வருவதே ப்ரோமோ போட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் சண்டையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள் . அவர் தமிழ் பழமொழியான நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்னும் பழமொழியை கூறும்போது பாலாஜி பக்கத்தில் இருந்துகொண்டு அப்போ எருமை மாட்டுக்கு என்ன சூடு என்று கலாய்த்து கொண்டு இருக்கிறார்.

சின்னப் பொண்ணுங்க
அதுமட்டுமல்லாமல் ரேகா சுரேஷிடம் அவள் சின்ன பொண்ணு விடுங்க என்று ஆறுதல் கூறும் போது அதற்கு சுரேஷ் பயங்கரமான எக்ஸ்பிரஸனோடு அவருடன் என்னங்க சின்ன பொண்ணு பெரிய பொண்ணு அவங்க அடல்ட், நீங்க சும்மா இருங்க என்று கூறுகிறார். இதை அப்படியே மீம்ஸ் கிரியேட்டர்களும் கலாய்த்து வருகிறார்கள்.. எப்படியோ ஒருவழியாக பரபரப்பு இருந்தால்தான் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை உள்ள இருப்பவர்களிடம் நல்லாவே ட்ரெயின் பண்ணி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .

வழக்கமா நடக்கிறதுதானப்பா
இது வழக்கமா எல்லா சீசனுக்கும் நடப்பதுதான் என்றாலும் அனிதா சம்பத் இந்த அளவிற்கு பேசுவார் என்று அவருடைய ரசிகர்களுக்கு இப்போதுதான் நன்றாக தெரிந்து இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் அவருடைய தீவிரமான ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை கலாய்த்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். எப்படியோ சீரியல்கள் போலவே இதையும் இன்னும் ஒரு வாரம் நன்றாக ஓட்டி விடுவார்கள்.

80ஸ் கிட்ஸுக்கு தெரியும்
இவர்கள் சண்டையை வைத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கும் கொண்டாட்டம்தான். இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத சுரேஷ் சக்கரவர்த்தியை பலரும் இவர் யார் என்று திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு பரபரப்பான சண்டையை உருவாக்கிவிட்டார்கள். மேலும் பலரும் யார் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி என்று கூகுளில் தேடிப் பிடித்து அவரைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.. அடடா அவரா இது என்று பலருக்கும் ஆச்சரியம் தருகிறதாம் சுரேஷின் பழைய கதைகள்.. பெரிய ஆள்தானப்பா.. 90ஸ் கிட்ஸுக்கு இவரைத் தெரிந்திருக்காது.. 80ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்பத் தெரிஞ்சவர்தான்.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications