முல்லை கேரக்டரை முடிச்சுருங்க.. சித்து இடத்தில் வேறு யாரும் வேண்டாம்.. ரசிகர்கள் கோரிக்கை!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரிலின் மிக முக்கிய கேரக்டரான முல்லை வேடத்தில்நடித்து வந்த சித்ரா திடீரென தன்னை மாய்த்துக் கொண்டதால் ரசிகர்கள் தொடர்ந்து சோகத்தில் உள்ளனர்.
Recommended Video

அவருக்குப் பதில் அடுத்து முல்லை வேடத்தில் நடிக்கப் போவது என்று தெரியவில்லை. முதலில் சரண்யா துராடி நடிக்கப் போவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது காயத்ரி நடிக்கப் போவதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் யார் நடித்தால் என்ன.. எங்க சித்ரா போய் விட்டார்.. எங்க முல்லை இறந்து போய் விட்டார்.. இனி யார் நடித்தாலும் அது சித்ராவின் இடத்தை நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் சோகமாக கூறி வருகின்றனர்.

முல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பான முதன்மையான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒன்று. இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக எடுத்ததாக இருந்தாலும் இதில் நடிக்கும் நடிகர்கள் அதே கேரக்டரில் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்துவிட்டனர். அதிலும் முல்லை என்னும் கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது .

மனதில் வாழும் முல்லை
இந்த கேரக்டரில் நடிப்பை பார்த்து தான் பலரும் இந்த சீரியலுக்கு சலிப்பு போகாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவருடைய நடிப்பை பார்த்து ஆண் ரசிகர்களும் பெண் ரசிகர்களும் உருகிப் போய் இருந்தனர்.பல பெண்கள் தங்கள் வீட்டிற்கு இந்த மாதிரி ஒரு மருமகள் தான் வேண்டும் என்று பெண் பார்க்கும் அளவிற்கு இந்த கேரக்டர் ரசிகர்களிடம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

மனம் கவர்ந்த சித்ரா
முல்லை கேரக்டரில் இதுவரைக்கும் விஜே சித்ரா நடித்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் இந்த சீரியலில் வேறொருவர் நடிக்கப்போகிறார் . அதுவும் யார் நடித்தாலும் அவருடைய இடத்தை பெற முடியாது என்றுதான் பல ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலில் முதன்மையான கதைக்களமாக கதிர் முல்லை ஜோடியை சுற்றியே இருந்தது .

குடும்பமே ரசிகர்கள்தான்
அதிலும் இவர்களின் காதல் கதையை பார்ப்பதற்காக இளைஞர்கள் கூட்டம் முதல் வீட்டுப் பெரியவர்கள் வரை டீவி முன்பு காத்திருந்தனர். அந்த அளவுக்கு இருவரம் அப்படி நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் எப்போது சேருவார்கள் என்று தான் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது தான் அவர்கள் இருவரும் நன்றாக புரிந்து கொண்டு ஆழமாக காதலை வெளிப்படுத்தி போய்க் கொண்டிருந்தனர்.

கவலையில் மூழ்கிய ரசிகர்கள்
இந்த நிலையில்தான் திடீரென்று சித்ரா இறந்த செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்களும் நடிகர்களும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உறைந்திருக்கின்றனர். எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் இவர் இந்த சீரியலில் அமைதியின் சொரூபமாக எதிர்த்து பேசாத கியூட்டான அழகான மருமகளாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பை பார்த்து பலரும் இவரை கொஞ்சி தீர்த்தனர்.

புகழின் உச்சம்
அவர் இதற்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும் இந்த சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். ரசிகர்களின் மனதிலும் ஆழமான ஒரு இடத்தை பிடித்த இவருடைய இறப்பு ரசிகர்களுக்கு பெரும் துயரமாக இருக்கிறது. ஆனாலும் அவரை வைத்து எடுத்த சீன்கள் மட்டுமே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதையே ஜீரணிக்க முடியலையே
அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது அவரை மீண்டும் இந்த சீரியலில் பார்த்துக்கொண்டிருக்கும் போது கூடுதலாக துக்கம் அவர்களை வாட்டி எடுக்கிறது. இந்த இடத்திற்கு இனி சரண்யா துராடி நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காயத்ரிக்கு வாய்ப்பு
அது சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் நடித்திருந்தவர் காயத்ரி. அவரைத்தான் தற்போது முல்லை கேரக்டரில் நடிக்க வைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. காயத்ரி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவர்தான் முல்லை கேரக்டரில் நடிக்க போகிறார் என்று கூறுவதை ரசிகர்கள் இதுவரை வரவேற்கவில்லை.

கேரக்டரை முடித்து விடுங்க
இதனை கேள்விப்பட்டதும் பல்வேறு ரசிகர்களும் யார் வந்து நடித்தாலும் முல்லை இடத்தை பிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் முல்லை கேரக்டரை தயவுசெய்து அந்த சீரியலில் இறந்து போன மாதிரி காட்டி விடுங்கள். எங்களால் இனி ஒருவரை அந்த கேரக்டரில் முல்லையாக பார்க்க முடியாது என்று தங்களுடைய கவலைகளையும் சித்ரா மீது வைத்திருந்த பாசத்தையும் கமெண்ட் களாக போட்டு வருகின்றனர்.
மக்கள் மனதில் இப்படி வாழ்ந்து வருகிறாரே சித்ரா.. தனது உயிரை அவசரப்பட்டு மாய்த்துக் கொண்டு விட்டாரே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications