Chithi 2 Serial: குஷ்பூவுக்கா.. ராதிகாவுக்கா? ராசாத்தியா இல்லை லட்சுமி ஸ்டோர்ஸா?
சென்னை: சித்தி 2 சீரியல் சன் டிவியில் என்று ராதிகா சரத்குமார் அதிகார பூர்வமாக ட்வீட் செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.சன் டிவியில் ராதிகா சரத்குமாரின் சித்தி, அண்ணாமலை, செல்வி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி சீரியல்களுக்குப் பிறகு சித்தி 2 அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சந்திரகுமாரி சீரியல் அவ்வளவாக வெற்றி இல்லை என்கிற நிலையில், அதற்கான ஸ்லாட் நேரத்தை 6:30 என்று மாற்றி தந்தது சன் டிவி.

சித்தி ஹிட்
சித்தி சூப்பர் ஹிட் சீரியல்... இந்த சீரியலில் ராதிகா நடுத்தர வயதுக்கு சற்றே குறைந்த இளமையான தோற்றம். சிவகுமார் இவருக்கு சரியான ஜோடி என்று ஜோடிப் பொருத்தம் நன்றாக அமைந்து இருந்தது. குடும்பப்பாங்கான தோற்றத்தில் ஒரு ராதிகா, ஐபிஎஸ் ராதிகா என்று இரட்டை வேடத்தில் இன்னொரு ராதிகா என்று ரசிகர்களுக்கு ராதிகா விருந்து படைத்து இருந்தார். அந்த வகையில் சித்தி சூப்பர் ஹிட் சீரியல்.

சித்தி 2 அப்படி
சித்தி 2 சீரியல் அப்படி இருக்குமா என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. சீரியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு சித்தி 2 சூப்பர் ஹிட்டாகத்தான் இருக்கும் என்று இருக்கிறது.ஆனால், ராதிகா சந்திரகுமாரி சீரியல் சூப்பர் ஹிட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றுதானே களம் இறங்கி இருப்பார்.? ஏன் அவரால் மக்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க முடியவில்லை? அப்படி பார்க்கும்போது சித்தி 2 வெற்றிக்கு ரொம்ப முனைப்பாக செயல்பட வேண்டுமே.. அந்த முனைப்பை ராதிகா சரத்குமார் சித்தி 2 வில் காண்பிப்பாரா?

சி.ஜே .பாஸ்கர்
சி.ஜே .பாஸ்கர் இயக்கம் மட்டுமே சித்தியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவிடுமா? சித்தியின் இசை தீனா போல, சித்தி 2 வின் இசை, டைட்டில் பாடல் நித்யஸ்ரீ இதை எல்லாம் அதை போலவே கடைப்பிடிப்பார்களா? நடிப்பும் ராதிகா சரத்குமார் தொடருவரா? அப்படி இல்லாத பட்சத்தில் சித்தி 2 வெற்றி சாத்தியமா என்கிற பல கேள்விகள் பலருக்குள்ளும் எழுவது இயற்கைதான்.

இது ரொம்ப முக்கியம்
எல்லாவற்றையும் விட இதுதான் ரொம்ப முக்கியம். அதாவது சித்தி 2 க்கான ஸ்லாட் சந்திரகுமாரிக்கு கடைசியாக ஒதுக்கப்பட்ட 6:30 நேரமா? இல்லை ஆரம்பத்தில் ராதிகாவின் எல்லா சீரியல்களுக்கு ஒதுக்கப்பட்ட 9:30 மணி நேரமா? இல்லை ராசாத்தி சீரியல் ஒளிபரப்பாகும் 9:00 மணி நேரமா?

ராசாத்தி சீரியல்
இப்போது ராதிகாவுக்கு எப்போதும் ஒதுக்கப்பட்ட 9:30 மணி நேரத்தில் குஷ்பூவின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலுக்கான நேரத்தில் கை வைக்காமல் ராசாத்தி சீரியல் நேரத்தை சித்தி 2 ராதிகா சீரியலுக்கு ஒதுக்கி தருவார்களா?
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications