ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ஆலியா மானசா.. இனி சந்தியாவாக.. "இவருக்கு" பதில் இவரா?
சென்னை: ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா தற்போது கருத்தரித்துள்ளதால் அந்த சீரியலில் இருந்து விலகும் நிலையில் அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல் எந்த குடும்பத்தில்தான் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது என கேட்கும் அளவுக்கு வீடுகளிலும் சண்டைகள், குழப்பங்கள் இருக்கின்றன.
இந்த குடும்ப சண்டைகள் டிவி சீரியல்களிலும் எதிரொலிப்பதால் ஆஹா நம்ம வீட்டு கதை போலவே இருக்கே!, நம் மாமியார் போலவே இருக்காங்களே, நம் மருமகள் போலவே இருக்காங்களே, நம் கணவரின் குணாதியசங்கள் அப்படியே இருக்கே! நம் மனைவியின் 10 பொருத்தங்களுடன் இந்த பெண்ணுக்கு பக்காவா பொருந்துகிறதே! என நினைக்கத் தோன்றுகிறது.

பொழுதுபோக்கு
இதனால் மக்களின் பொழுதுபோக்காக இந்த சீரியல்கள் மாறிவிட்டன. எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதையும் மக்களுக்கு கற்றுத் தரும் விழிப்புணர்வு அம்சங்களாகவும் இவை இருக்கின்றன என்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. இது ஏற்கெனவே முதல் சீசன் முடிந்துள்ளது. முதல் சீசனிலும் ஆலியா நடித்திருந்தார். இது படமாகவும் எடுக்கப்பட்டது.

சீசன் 2
இந்த நிலையில் சீசன் 2 வில் சித்து, ஆலியா மானசா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்திலும், ஆலியா சந்தியா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழும் சந்தியாவுக்கு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கிறது.

சரவணன்- சந்தியா
ஆனால் போலீஸ் என்ற பெயரை கேட்டாலே மாமியாருக்கு பிடிக்காது. இந்த நிலையில் சந்தியாவின் ஆசையை தெரிந்து கொள்ளும் சரவணன், தனது மனைவிக்காக தனது தாயிடம் சிபாரிசு செய்கிறார். ஆனால் அவரோ சரவணனை திட்டி அதெல்லாம் போலீஸ் அதிகாரியாக கூடாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

ஆலியா மானசா
இந்த நிலையில் அவர் தாயின் பேச்சை கேட்கிறாரா, இல்லை மனைவியின் ஆசையை நிறைவேற்றுகிறாரா என்பது போல் இந்த சீரியல் நகர்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் ஆலியாவுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார்.

இவருக்கு பதில் இனி இவரா?
அவருக்கு பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில் மாடல் அழகி ரியா விஸ்வநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலியா வரும் சீன்கள் முடிந்த பிறகுதான் இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும். ஏற்கெனவே பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய கேரக்டரில் நடித்த முல்லை, கண்ணம்மா ஆகியோருக்கு பதிலாக வேறு நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications