பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்.. இதுதான் காரணமா?
சென்னை: பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரிக்கு ஏன் படவாய்ப்புகளே வரவில்லை. ஒரு வேளை இதுதான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆரி அர்ஜுனன். இவர் 2010 ஆம் ஆண்டு ரெட்டச்சுழி படத்தில் நடித்திருந்தார். அது போல் நெடுஞ்சாலை, மாயா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் திண்டுக்கல் மாவட்டம் , பழனி வட்டத்தை சேர்ந்தவர். இவர் உடற்பயிற்சியாளரும் கூட! இவர் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான நதியாவை காதலித்து வந்தார். பின்னர் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

2017 இல் குழந்தை
இவர்களுக்கு 2017 ஆம் ஆண் குழந்தை பிறந்தது. இவர் 2020 ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், ஆரியிடம் வம்பிழுத்து கொண்டே இருப்பார். பாலாஜிக்கு ஆரி பொறுமையாக பதில் கொடுப்பதும் அதற்கு பாலாஜி கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதும் என இருக்கும்.

குணாதிசயம்
ஆரியின் குணாதிசயம், பாலாஜியிடம் கடைப்பிடித்த பொறுமை, வீண் சண்டைக்கு போகாமல் இருப்பது உள்ளிட்டவைகளால் ஆரிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருந்தது. டைட்டில் வின்னர் பாலாஜியா ஆரியா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 16 கோடி ஓட்டுகள் கிடைத்தன. ரன்னர் அப்பான பாலாஜிக்கு 6 கோடி ஓட்டுக்களும் கிடைத்தன.

ரூ 50 லட்சம் பரிசுத் தொகை
ஆரிக்கு ரூ 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு போட்டியாளருக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுக்கும். அந்த வகையில் ஏற்கெனவே நடிகராக இருந்த ஆரிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. டைட்டில் வென்றவுடன் இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிக்பாஸ் டைட்டில்
ஆனால் பிக்பாஸ் டைட்டில் வென்றவுடன் ஆரிக்கு பல இயக்குநர்கள் வந்து கதை சொல்ல போனார்களாம். ஆனால் ஆரி அந்த கதைகளில் அதிகம் மாற்றங்களை செய்ய கூறினாராம். மேலும் கதை மட்டுமல்லாமல் வசனங்களையும் மாற்றக் கூறினாராம். இதனால் இவர் ஒத்து வர மாட்டார் என கருதியே இயக்குநர்கள் இவரிடம் கதை சொல்ல செல்வதையே விட்டுவிட்டனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications