சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகர் சஞ்சீவ்! ஓ இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சன் டிவி சீரியலில் இருந்து நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் திடீரென விலகிவிட்டார். இதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சீரியல்கள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் என்பதால் இவரது விலகல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய்யின் நண்பரான இவர் மறைந்த நடிகை சிந்துவின் தம்பியாவார். இவர் ஆரம்ப கட்டங்களில் சினிமாவில் நடித்து வந்தார். விஜய்யுடன் கூட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சன் தொலைக்காட்சியின் மெட்டி ஒலி சீரியலில் வில்லன் ரோல் செய்திருந்தார்.

பின்னர் திருமதி செல்வம் என்ற சீரியலில் செல்வம் என்ற கேரக்டரில் நடித்து வந்தார். நம்பிக்கை, அண்ணாமலை, ஆனந்தம், அகல்யா, மனைவி, யாரடி நீ மோகினி, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் பல்வேறு சேனல்களில் நடித்துள்ளார்.
திருமதி செல்வம் நாடகத்தில் நடித்ததற்காக இவர் 4 விருதைகளை பெற்றார். வானத்தை போல சீரியலிலும் போலீஸ் ரோலில் நடித்திருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இவர் சன் டிவியில் லட்சுமி என்ற தொடரில் நாயகனாக நடித்து வந்தார். இதிலும் செல்வம் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த சீரியலில் ஸ்ருதிராஜ் நாயகியாக நடித்து வருகிறார். டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் இருந்து தற்போது சஞ்சீவ் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மகராசி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யன், செல்வமாக நடிக்கிறார். இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்திருந்த ஸ்ருதிகாவை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சஞ்சீவ் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார். சீரியலில் ஸ்ருதிக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் இவருக்கான முக்கியத்துவம் என்பது குறைந்துவிட்டதால் இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என சொல்லப்படுகிறது.இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இவரது மனைவி ப்ரீத்தி, ஆனந்த ராகம், மூன்று முடிச்சு ஆகிய நாடகங்களில் நடித்து வருகிறார். இரண்டிலுமே ஹீரோவுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஒரு சீரியலில் மருமகளை கொண்டாடும் மாமியாராகவும் மூன்று முடிச்சு சீரியலில் பணக்கார மாமியாராகவும் மருமகளை கீழ்த்தரமாக நடத்துபவராகவும் நடித்து வருகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications