குட்டிச் சுட்டீஸ்ல அப்பா அம்மாவை ஏன் இப்படி கஷ்டப்படுத்தறீங்க?
சென்னை: சன் டிவியின் குட்டிச் சுட்டிஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளின் அப்பா அம்மாவை பாட்டுக்கு ரொமாண்டிக்கா டான்ஸ் ஆட சொல்லி, அல்லது வசனம் பேச சொல்லி டார்ச்சர் பண்றது நல்லாயில்லைங்க.
குட்டி சுட்டிஸ் நிகழ்சசியை நடிகை கோவை சரளா இமான் அண்ணாச்சிக்கு நிகராக ரொம்ப நல்லாத்தான் நடத்தறார்.
நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நடுநடுவில் நிகழ்ச்சியை இப்படி டிராக் மாற்றி கொண்டு போவது நன்றாக இல்லை.

அம்மாக்கள் குழாயடி
நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு அம்மக்களை குழாயடி சண்டை போட வைத்தது அப்படித்தான் பார்க்க நன்றாக இல்லை. முகம் சுளிக்க வைத்தது. முன்பு இந்த நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி நடத்தி வந்தார். அவருக்கு பதிலாக இப்போது கோவை சரளா நடத்த வந்திருக்கும் இந்த வேளையில் நிகழ்ச்சி சுவை கூட்டுவதாக இருப்பதோடு நல்ல தரத்தோடும் இருக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி தயாரிப்பாளர் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

ரொமான்ஸ் செய்ய
நேற்றைய நிகழ்ச்சியில் குழந்தையை அழைத்து நீங்கள்தான் காக்க காக்க சூர்யா ஜோதிகா ரொமான்ஸ் செய்யுங்கள் என்று சொன்னால் பாவம் அந்த பெற்றோர் என்ன நடிகர்களா? என்னவோ அவர்களுக்கு வந்ததை செய்தார்கள். அதுவும் எடுபடவில்லை. நமக்குத்தான் அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.

நீங்கள் நக்மா
இன்னொரு பெற்றோரை அழைத்து நீங்கள்தான் ரஜினி நீங்கள் நக்மா.. எங்கே வசனம் பேசுங்கள் என்று கூறினார். அவர்கள் ஏதோ பேசினார்கள். இவர்களை பார்க்கவும் பாவமாக இருந்தது. இந்த தர்ம சங்கடம் எல்லாம் எதற்கு? குழந்தைகள் நிகழ்ச்சியை குழந்தைகளுக்காக என்று பாருங்களேன்.

சூப்பர் ஆங்கர்
குட்டிச் சுட்டிஸ் நிகழ்ச்சி மூலம் கோவை சரளா லட்டு மாதிரி சூப்பர் ஆங்கர் என்று தன்னை நிரூபித்து சன் டிவிக்கு அண்ணாச்சி இடத்துக்கு கிடைத்துள்ளார். அவரை வைத்து நல்ல தரமாக நிகழ்ச்சியை கொண்டு போகலாம். அதை விடுத்து நிகழ்ச்சியை கோமாளித்தனமாக மாற்றி சீக்கிரம் ஊற்றி மூடி விடாதீர்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications