பட்டும் படாமல்.. மாயாவிற்கு நோகாமல் பேசிய கமல்ஹாசன்.. அவரிடம் மட்டும் பாரபட்சம்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: நடிகை மாயாவிடம் மட்டும் கமல்ஹாசன் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 7ல் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சீசனில் நடிகை மாயா மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆள் சேர்த்துக்கொண்டு உள்ளே இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது முதல் புகார்.

அதாவது உள்ளே இருப்பவர்களை கூட்டு சேர்த்து கொண்டு bully செய்கிறார் என்பது முதல் புகார். அதிலும் அர்ச்சனா உள்ளிட்டவர்களை கடுமையாக பேசுகிறார். விசித்திராவை வீழ்த்த கடுமையாக சதித்திட்டங்களை தீட்டுகிறார் என்றும் கூட புகார்கள் வைக்கப்படுகின்றன. இடையில் பிரதீப் வெளியேறியதற்கு கூட இவர் மீதுதான் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
கமல் ஹாசன் திட்டவில்லை: மாயாவிடம் கோபம் அடைவது இல்லை.. கமல்ஹாசன் சகஜமாக பேசுகிறார் என்ற புகார் உள்ளது. கடந்த வார இறுதியில் பிரதீப் வெளியேற்றப்பட்டது பற்றிய கேள்விகளை கமல்ஹாசன் மாயா உள்ளிட்டோரிடம் எழுப்பினார். ஆனாலும் அவர் அங்கே எடுக்கப்பட்ட முடிவை ஆதரிக்கும் விதமாகவே பேசினார். முக்கியமாக இந்த முடிவை நான் எடுக்கவில்லை. நாங்கள் ரெட் கார்டு ஆப்ஷன் கொடுத்தோம்.
அவர்கள்தான் அதை பயன்படுத்தினார்கள். மற்றபடி நாங்கள் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என்று கமல் ஹாசன் நாசுக்காக விலகிக்கொண்டார் . மாயாவை இதில் கமல்ஹாசன் விமர்சனம் செய்யவில்லை. ஆங்காங்கே செல்லமாக குட்டு வைத்தாலும் கூட எங்கேயும் கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. அவருக்கு வலிக்காமல் விமர்சனம் செய்தார்.
ஏன் இப்படி: மாயாவிடம் கமல்ஹாசன் கரிசனம் காட்டுகிறார். அவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார். கோபம் அடைவது இல்லை என்று விமர்சனம் உள்ளன. மாயாவிடம் மட்டும் கமல்ஹாசன் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது .
அதன்படி கமல்ஹாசனின் விக்ரம் 2ல் அவர் நடிக்க உள்ளார். விக்ரம் 1ல் வந்துவிட்டு சென்றாலும் விக்ரம் 2ல் அவர் கமல் டீமில் நடிக்க உள்ளார். அதேபோல் எல்சியூவில் உள்ளார் . அப்படி இருக்க அவரிடம் மிக மோசமாக நடந்துகொள்வது சரியாக இருக்காது. அவரை கடுமையாக பேசுவது சரியாக இருக்காது.
அதோடு படத்திலும் கமலுடன் மாயா சகஜம் ஆகிவிட்டார். இதுதான் கமல் மாயாவை கண்டிக்காமல் மேம்போக்காக விட காரணமாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
பின்னணி: முன்னதாக நடந்து வரும் பிக் பாஸ் 7 சீசனில் நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக நடிகை மாயா உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் வெளியேற்றப்பட்டு உள்ளார்.
முதல்நாள் வரை பிரதீப் உடன் மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் சகஜமாக பேசி வந்த நிலையில் வார இறுதியில் திடீரென இப்படி பாதுகாப்பு இல்லை என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. அதோடு பிரதீப் மீது வைக்கப்படும் புகார்கள் பலவற்றிற்கு ஆதாரம் இல்லாதது, முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருப்பதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications