Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

chithi 2 serial: சித்தி தாலிச் செயினை நந்தினிகிட்டே எதுக்கு குடுத்தாங்க?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chithi 2 Today Full Episode | Radhika Sarathkumar | Venba Kavin

    சென்னை: சித்தி 2 சீரியலில் அன்புவுக்கும் நந்தினிக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. அன்பு சித்தியோட பையன்.நந்தினி அவங்க வீட்டுக்கு வரப் போற மருமக. மாப்பிள்ளை வீட்டில் தாலிச்செயின் எடுக்கறாங்க. செயின் செலக்ட் செய்ய நந்தினியை கூப்பிடறாங்க... ஓகே!

    அந்த செயினை மாப்பிள்ளை வீட்டில் வச்சுத்தான் கல்யாணம் நடக்கும்போது பெண்ணின் கழுத்தில் போட்டு விடுவாங்க. இங்கே என்னவோ வாங்கின உடனே நந்தினி கையில் கொடுத்துடறாங்க. உங்க வீட்டில் வச்சு பூஜை செய் நந்தினின்னு வேற சித்தி சொல்றாங்க.

    நந்தினியோட கேரக்டர் நெகட்டிவ்வா மாறிடுச்சுன்னு மக்களுக்கு காண்பிக்க இது மாதிரி சீன் வச்சு இருக்காங்க. இது என்னவோ காட்சிக்கு ஒட்டவே இல்லை. சித்தி 2 சீரியலில் என்னதான் மெசேஜ் சொல்றோம்னு ராதிகா சொன்னாலும், வீட்டுக்கு மருமகளா வருவதற்கு முன்பே இத்தனை குரூரமா யோசிக்கற மாதிரி காண்பிக்கறது, இதுவும் வழக்கமான கதைதான் என்பது போல ஆகிருச்சு.

     ராதிகா பொன்வண்ணன்

    ராதிகா பொன்வண்ணன்

    ராதிகா பொன்வண்ணன் சாரதா சண்முகமாக நல்ல ஜோடிப் பொருத்தமாக இருக்காங்க.பொன்வண்ணன் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வது கூட நல்லாத்தான் இருக்கு.வெளிப்படையா மனைவியை இப்படி சொல்லி சொல்லி கொண்டாடுவதை பெண்கள் ரொம்பவும் விரும்புவார்கள். அதிலும், இப்படி நடுத்தர வயதில் ஒரு ஆண் மனைவியை கொண்டாடும்போது அவர்கள் கடந்து வந்த பாதையில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள், சுக துக்கங்கள் இவற்றின் உண்மைத் தன்மை தெரியும்.

     காதலிக்கும்போது தவறு

    காதலிக்கும்போது தவறு

    சித்தி 2 சீரியலில் காதலர்கள் செய்யும் தவறு என்று ஒன்றை சுட்டிக் காண்பித்து இருக்கிறார்கள். எப்போதுமே நாம் ரயிலில் போகும்போதும், அல்லது எங்காவது உட்கார்ந்து இருக்கையிலும், காதலனோ, காதலியோ போனில் பேசுவதை கேட்டு இருப்போம். பெரும்பாலும் பசங்க பேசும்போது தன் குடும்பத்தில் இன்னிக்கு என்ன நடந்தது என்பதை ஒப்பித்துக்கொண்டு இருப்பார்கள். இது பேசத் தெரியாமல் பேசுவதா, இல்லை பேச ஒன்றும் இல்லை என்று பேசுவதா தெரியவில்லை.

     பேச ஒன்றும் இல்லை

    பேச ஒன்றும் இல்லை

    பேச ஒன்றும் இல்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே... இல்லை சினிமா, பார்க், பீச் என்று எங்காவது உட்கார்ந்து கடலை போடுங்கள்.. அதுவும்தானே செய்கிறோம் என்று சொன்னால், வேலை இருக்குன்னு சொல்லி விட்டுடுங்க. இல்லை மெசேஜ் பண்ணிக்கிட்டு திரியுங்கள். வீட்டில் நடப்பதை போட்டுக் கொடுத்துட்டு, அவள் பின்னால் தங்கையை, அம்மாவை என்று இளக்காரமாக பேசினால் உடனே சர்ர்ருன்னு ரோஷம் பொத்துகிட்டு வந்து என்ன பிரயோஜனம்?

     பொன்வண்ணன் இதைத்தான்

    பொன்வண்ணன் இதைத்தான்

    பொன்வண்ணன் இதைத்தான் சித்தி 2 சீரியலில் உரைக்கும்படி சொல்லி இருக்கார். ராதிகாவும், வீட்டுக்கு வரும் பெண்கள் அவர்களாக புகுந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் தெரிந்துக்கொள்ள அவகாசம் கொடுங்கள் என்று சொல்லி இருக்கார். இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக காதலிப்பவர்களுக்கு நல்ல மெசேஜ்தான். அவ்வப்போது இப்படி குட்டி குட்டி மெசேஜும் சொல்கிறார்கள் சித்தி 2 சீரியலில்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+