கதிரிடம் ஏன் அப்படிச் சொன்னார் சித்ரா.. வினையாப் போச்சே.. கதறும் ரசிகர்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் விளையாட்டாக பேசிய வார்த்தைகள் தான் தற்போது சித்ராவுக்கு வினையாக முடிந்துவிட்டது என்று ரசிகர்கள் கதறி அழுகின்றனர்.
யாராக இருந்தாலும் ஒருவர் அருகில் இருக்கும் போது அவர்கள் பேசிய வார்த்தைகள் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அது அவர் இல்லை என்று தெரியும் போது அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு கஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த மாதிரிதான் இதுவரைக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த சித்ரா தற்போது இறந்து விட்டாலும் அவர் பேசிய வார்த்தைகள் அவருடைய ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சோகம் குறையலே
சித்ரா இறந்து மூன்று நாட்கள் ஆனாலும் அவருடைய இறப்பின் காரணம் யாருக்கும் தெரியாமல் தான் இருந்து வருகிறது .அது மட்டுமல்லாமல் அவருடைய இழப்பை அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் உறவினர்களும் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறக்க முடியலையே
இந்த நிலையில் அவர் பேசிய பழைய வீடியோக்களும் போட்டோக்களும் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய மன கவலையோடு இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகின்றனர் .அந்த மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதிரிடம் நான் செத்துப்போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணி கொள்வீங்களா என்று திரும்பத் திரும்ப கேட்பார்.

கதிரிடம் கேட்டது ஏன்
அந்த வீடியோவை தற்போது அவருடைய ரசிகர்கள் இப்படி நடக்கும் என்பதற்காகவா அப்பவே அப்படி கேட்டீங்க என்று வருத்தத்தோடு வெளியிட்டு வருகிறார்கள். இந்த மாதிரி அவர் பேசிய பல வீடியோக்களையும் எடிட் பண்ணி அவருடைய ரசிகர்கள் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.

திரும்பப் போவதில்லையே
என்னதான் இருந்தாலும் இனி அவர் திரும்ப வரப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதுவரைக்கும் இருந்த அவர் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் அவருடைய பழைய வீடியோக்களை எடிட் பண்ணி இப்படி பார்த்து வருகின்றனர். இந்த மாதிரி அவர் வீடியோக்களை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருப்பதும் ஒரு வித மன அழுத்தத்தை தான் ஏற்படுத்தும்.

இருக்க முடியலையே
அவரது முகத்தை பார்த்தாலே எங்கள் கூடதான் அவர் இருக்கிறார் என்பது போலத்தான் இருக்கிறது என்றும் சிலர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .என்னதான் இருந்தாலும் அவர் இனி அமைதியாக உறங்கட்டும் என்று தான் அனைவரும் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் ஆனால் பலரால் இருக்க தான் முடியவில்லையாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸை பார்க்க மாட்டோம்
அதனால் தான் இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் இனி நாங்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்க்க போவது இல்லை .அந்த சீரியலில் முல்லை கேரக்டரை இறந்துவிட்டார் என்று காட்டி விடுங்கள். அவருக்கு பதிலாக யாரையும் அதில் நடிக்க வைக்காதீர்கள் அப்படி இன்னொருவரை எங்களால் அந்த இடத்தில் பார்க்க முடியாது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

முடிச்சிருங்க வேண்டாம்
அவர் அந்த பாண்டியன் ஸ்டோர் வீட்டுக்குள் அவருடைய ரூமுக்குள் கட்டிலில் அமர்ந்து இருப்பது போல போட்டோவை வைத்து அதில் தங்களது மனக்கவலைகளை கவிதைகளாக போட்டு இன்ஸ்டாகிராமில் பரப்பி வருகிறார்கள் .இந்த போட்டோஸ்களும் வைரலாக பரவி வருகிறது. என்ன சொல்லி என்ன ஆகப் போகுது.. சித்ரா மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications