பிவிஆர் ஐநாக்ஸ் அடுத்த 6 மாதத்தில் 50 தியேட்டர்களை மூடுவதாக அறிவிப்பு..105 கோடி நஷ்டத்தால் அதிர்ச்சி
பெங்களூரு: இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் குழுமம் கடந்த காலாண்டில 333 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. இந்த நஷ்டத்தை குறைக்கும் முயற்சியாக பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள 50 திரையரங்குகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது.
பிவிஆர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதேபோல் ஐநாக்ஸ் திரையரங்குகளும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் கடந்த பிப்ரவரி மாதம் இணைந்தன.

இதன்படி பிவிஆர் நிறுவனத்துடன் ஐநாக்ஸ் குழுமம் இணைந்த பின்னர் பிவிஆர் - ஐநாக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,
இந்த நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.333 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.
அதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ. 16.1 கோடி லாபமும், அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.105 கோடி நஷ்டமும் பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருந்தது.
நான்காவது காலாண்டில், செயல்பாடுகளின் வருவாய் இருமடங்காக அதிகரித்து, ரூ.1,143 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.536 கோடியாக இருந்தது . 333 கோடி நிகர இழப்பை பிடிஆர் சந்திக்க, பாலிவுட் படங்களின் தொடர் தோல்வி, ஓடிடி தளங்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் 50 திரையரங்குகளை அடுத்த ஆறு மாதங்களில் மூட இருப்பதாக பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 50 திரையரங்குகளால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த காலாண்டில் மட்டும் சுமார் 105 கோடி நிகர இழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேநேரம் லாபம் அதிகம் வரும் பகுதிகளில் 2024 நிதியாண்டில் மேலும் 150-175 திரையரங்குகளை (முக்கியத்துவம் அடிப்படையில்) திறக்க PVR INOX திட்டமிட்டுள்ளது.
"கடந்த சில மாதங்களாக பாக்ஸ் ஆபிஸில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அடுத்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளில் இந்தப் போக்கு சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று PVR INOX நிறுவனம் தங்கள் இழப்பு குறித்து தெரிவித்துள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications