ஜூனியர் என்டிஆரா அது? என்னங்க ஆளே இளைத்து போய்விட்டாரே! என்னாச்சு? ரசிகர்கள் கவலை
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர், தற்போது எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் அவருக்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் அண்மையில் தேவாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்திருந்தார். இது கடந்தாண்டு வெளியானது. இந்த படம் சுமார் ரூ 500 கோடி வசூலை வாரி குவித்தது.

இந்த படம் ஜப்பான் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியாகி அங்கும் மாஸ் காட்டியது. தமிழ் படங்கள் மீது ஜப்பான் ரசிகர்களுக்கு மவுஸ் இருக்கிறது. உதாரணம் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம். அந்த வகையில் தற்போது தெலுங்கு படத்திற்கும் ஜப்பான் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
புரமோஷன்
ஜப்பானில் படத்தை புரமோஷன் செய்துவிட்டு இந்தியா வந்த ஜூனியர் என்டிஆர் பார்ப்பதற்கு உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். திடீரென உடல் எடை குறைய காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
உணவு கட்டுப்பாடு
அவர் ஏதேனும் கடும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறாரா, இல்லை அவருக்கு உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சினையா என ரசிகர்கள் கவலை கொண்டனர். பலர் ஜூனியர் என்டிஆரின் இந்த மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ஜூனியர் என்டிஆர்
தற்போதுதான் ஜூனியர் என்டிஆர் ஃபிட்டாக இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள். மேலும் துபாயில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. அப்பேது சிலர் அவர் உடல் எடையை குறைக்க ஊசி போட்டு கொண்டதாக கூறி வந்தனர். மேலும் அவருக்கு என்ன ஆச்சு என கவலைப்பட்டனர்.
ஜூனியர் என்டிஆர் காரு
மேலும் ஜூனியர் காரு, உடல் எடையை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்யாதீர்கள் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் வட்டாரங்களில் விசாரித்த போது, "என்டிஆர் ஆரோக்கியமாக இருக்கிறார். உடல் எடையை குறைக்க ஊசி ஏதும் போட்டுக் கொள்ளவில்லை" என தகவல்கள் கிடைத்தன.
உடல் எடை
அவர் தனது உடல் எடையை குறைக்க புதிய உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்திற்காக அவர் உடலை வருத்திக் கொண்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூனியர் என்டிஆர் டயட்டில் இருந்து வருகிறார், இதனால்தான் இரு மாதங்களில் இத்தகைய ரிசல்ட் கிடைத்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.
வார் 2
என்டிஆர், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடைய தேகத்திற்கு அவர் மேட்ச் ஆக தனது உடலை குறைத்திருக்கலாம் என்கிறார்கள். வார் 2 என்ற இந்தி படம் இந்த ஆண்டு ரிலீஸாகிறது. இதில் என்டிஆர் வில்லனாக நடித்து வருகிறாராம். இந்த படத்தில்தான் என்டிஆரும், ஹிருத்திக்கும் நடித்து வருகிறார்கள்.
சிகாகோ
அண்மையில் சிகாகோவில் நடந்த ஒரு ரசிகர்களின் நிகழ்வில் கூட ஹிருத்திக் பட ஷூட்டிங்கில் நடந்த ஜாலியான விஷயங்கள ரசிர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது ஜூனியர் என்டிஆரை அவர் மிகவும் புகழ்ந்தார். ஜூனியர் என்டிஆருக்கு நடிப்பு திறமை மட்டுமில்லை, நன்றாக சமைக்கவும் செய்கிறார் என பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புகழ்ந்திருந்தார்.
ரூ 85 ஆயிரத்தில் சட்டை
நடிகர் ஜூனியர் என்டிஆர் அணிந்துள்ள ஒரு சட்டையின் விலை ரூ 85 ஆயிரம் என சொல்லப்படுகிறது. இது ETRO என்ற பிராண்டை சேர்ந்ததாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications