Lubber Pandhu OTT: கெத்து Vs அன்பு! லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு ஏன்? எப்போது வரும்?
சென்னை: லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் இன்று (அக்டோபர் 18) வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. இதை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சின்ன ஊரில் ரப்பர் பந்து கிரிக்கெட்டில் தன்னை கெத்தாகவே தொடர நினைத்து போராடும் நபர் அட்டக்கத்தி தினேஷ். அவருக்கு போட்டியாக பந்து வீச்சில் கிங்காக ஹரிஷ் கல்யாண்.
இருவருக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஈகோ, தினேஷின் மகளை ஹரீஷ் காதலிப்பது என பல விஷயங்கள் கலந்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமூகம் சார்ந்த கருத்துகளும் சொல்லப்பட்டுள்ளன. பெயிண்டரான அட்டக்கத்தி தினேஷுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம்.
முதல் பந்து சாமிக்கு மத்ததெல்லாம் தனக்கு என லப்பர் பந்தை வைத்து அதிரடி காட்டும் தினேஷ், ஆட்டத்தில் இறங்கும் போதே, "நீ பொட்டு வைத்த தங்கக் குடம்" பாடல் ஒலிக்கும். இவரது கிரிக்கெட் விளையாட்டை ஊரே கொண்டாடினாலும் அவருடைய காதல் மனைவி மட்டும் விரும்ப மாட்டார். வேலைக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு தினேஷ் கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவார்.
கிரிக்கெட் மைதானத்திற்கே நேரடியாக சென்று தினேஷை , மனைவி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வார். ஜெர்சி கடை வைத்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவரது கதாபாத்திரம் பெயர் அன்பு. ஒரு திருமணத்தில் வைத்து கதாநாயகியை பார்த்துவிடுவார். அது முதல் இருவரும் காதலிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் தெரிந்து பெண் கேட்க அன்பு, கெத்துவின் வீட்டிற்கு செல்ல, அங்கு அவரது மனைவி மட்டுமே இருப்பார். அவருக்கு மாப்பிள்ளையை பிடித்து போக , தன் கணவர் வந்ததும் பேசி முடித்துக் கொள்ளலாம் என சொல்லி அனுப்புகிறார்.
இந்த நிலையில்தான் கெத்துவுக்கும் அன்புவுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டில் மோதல் ஏற்படுகிறது. அப்போதுதான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தைதான் கெத்து என தெரிய வருகிறது. அதே வேளையில் எந்த கிரிக்கெட்டை கெத்துவின் மனைவி வெறுக்கிறாரோ, அதே கிரிக்கெட் மீது தன் மகளை திருமணம் செய்யும் அன்பும் உயிராக இருக்கிறார் என தெரியவருகிறது.
இதனால் இவர்களது திருமணத்திற்கு கெத்துவின் மனைவி ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறார். இந்த நிலையில் கெத்துவை எப்படி சமாதானப்படுத்துகிறார் அன்பு, காதலியை கரம் பிடிக்கிறாரா என்ற விவகாரங்களை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் லப்பர் பந்து.
இந்த படம் தியேட்டரில் ஓடி ரூ 50 கோடி வசூலை குவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் என்பது ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. அதே போல் வெளிநாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளம் வாங்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஓடிடியில் ரிலீஸாகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஓடிடி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியான பின்னரே வெளிநாட்டில் ஓடிடியில் வெளியிடப்படும் என ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில் வெளிநாட்டிலும் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.
லப்பர் பந்து திரைப்படம் தியேட்டர்களில் வெற்றி வாகை சூடி வருவதால் தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. எனவே சிம்ப்ளி சவுத்தும் தனது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications