ஏறெடுத்து பார்க்கறா நிலா... அடடே அங்க நீலாம்பரி... பொண்ணு பார்க்க வந்திருக்காங்க!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நல்லாவே போயிகிட்டு இருக்கு. நிலாவை எதுக்கு நீலாம்பரி டார்கெட் பண்றாங்கன்னு இன்னும் தெரிஞ்சுக்க முடியலை.
ஒரு வழியா கார்த்திக்கை லவ் பண்ணும் நிலாவை கன்வின்ஸ் செய்து, பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொல்லி சம்மதம் வாங்கிடறாங்க, அம்மாவும், மாமாவும். அப்பாவுக்கு இதுல சம்மதம் இல்லேன்னாலும், மிரட்டி பணிய வைக்கறாங்க பொண்டாட்டி.

நீலாம்பரி மகன் சஞ்சயுடன் நிலாவை பொண்ணு பார்க்க வர்றாங்க. நீலாம்பரியும் நிலாவும் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தாலும், இவங்கதான் தன்னை பார்க்க வர்றாங்கன்னு நிலாவுக்கு தெரியாது.
நிலாவோட தங்கச்சி ஸ்வேதாவை துப்பட்டா துப்பட்டான்னு சைட் அடிச்சுகிட்டு இருந்தவன் சஞ்சய், நிலா வீட்டில் ஸ்வேதாவை பார்த்து அதிர்ச்சி ஆகிறான். ஸ்வேதாவும் சஞ்சயை பார்த்து அதிர்ச்சியாகறா.
ஸ்வேதா போன் செய்து சஞ்சயிடம் சண்டை போடறா.. உங்க பணக்கார புத்தியை காமிச்சுட்டியே.. என் பின்னால சுத்திட்டு, இப்போ என் அக்காவை பொண்ணு பார்க்க வந்திருக்கியான்னு கத்தறா.

இது சும்மா அம்மாவுக்காக ஸ்வேதா...எந்த பொண்ணை பார்த்தாலும் புடிக்கலேன்னுதான் சொல்ல போறேன்னு சொல்லி சமாதான படுத்தறான்.
ஸ்வேதா.. போயி நிலாவை அழைச்சுகிட்டு வான்னு அம்மா சொல்ல, ஸ்வேதாவும், நடக்காத கல்யாணத்துக்கு ஏம்மா பொண்ணு பார்க்கற படலம்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு, நிலாவை அழைச்சுக்கிட்டு வர்றா.

நிலாவை பார்த்த சஞ்சய் மயங்கி போறான்.அவள் இன்னும் யாரையும் பார்க்கலை. நிலா பாருன்னு சொல்ல நீலாம்பரியை முதலில் ஏறெடுத்து பார்க்கறா. நீலாம்பரி சிரிக்கறாங்க, நிலா அதிர்ச்சி அடையறா...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications