டிராகன் ஹிட்! NEEK, வீர தீர சூரன் ஃபி்ளாப்! 2025-ல் தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு?
2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவில் திரையரங்குகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பெரும்பாலும் நஷ்டம்தான் மிச்சமாகியுள்ளது.
எதிர்பார்ப்பு
'விடாமுயற்சி' மீது இருந்த பெரிய எதிர்பார்ப்பு வசூலில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அது வந்த பின்பு வெளியான பல படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கவனிக்கத்தக்க இடத்தை பிடிக்க முடியாமல் போனது.

இந்த காலகட்டத்தில் ஒரே ஒரு படம் 'ட்ராகன்' மட்டுமே பெரிய வசூலை திரட்டியது. இந்த மூன்று மாதங்களில் வெற்றியடைந்த ஒரே மாஸ் படம் என்றும் கூறலாம்.
'வீர தீர சூரன்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், வசூலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
கதைகளுக்கு தட்டுப்பாடு
அதே நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட குடும்பஸ்தன் படம் எதிர்பார்ப்புகளை மீறி நல்ல விமர்சன வரவேற்பை பெற்றது. குடும்பத்தினை மையமாகக் கொண்டு நகரும் எளிய, உணர்வூட்டும் கதைக்களம், மனதை தொட்ட வசனங்கள் மற்றும் இயற்கையான நடிப்பின் மூலமாக, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மெதுவாக பரவியது. வசூல் ரீதியாகவும் இந்த படம் ஒரு 'டீசென்ட்' வெற்றியைப் பெற்றதாகக் கருதப்படுகிறது.
மறுபக்கம், மதகஜ ராஜா எதிர்பார்த்த அளவில் செம்மையான ஓட்டத்தைப் பெறவில்லை என்றாலும், அது ஒரு தோல்வி படமாகக் கருதப்படாமல் தப்பித்து, சராசரி பட்டியலில் இடம் பெற்றது. சினிமாவின் சில அம்சங்கள் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களை உருவாக்கின.
ஆனால் கிங்ஸ்டன் படம், தட்டுப்பாடான திரைக்கதை, கதாபாத்திர வளர்ச்சி இல்லாமை மற்றும் உணர்வியல் சலசலப்பின்மை ஆகிய காரணங்களால் எதிர்பார்த்த ஓட்டத்தை பெற முடியாமல், ஒருவிதமான தோல்வியையே சந்தித்தது. வணங்கான் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையிலேயே முடிவடைந்தது. இதனால், இந்தப் படங்கள் தமிழ்சினிமாவின் முன்னாள் நிலையை மீட்டுவைக்கும் வகையில் செயல்படவில்லை என்பது உறுதி.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'தருணம்', நேசிப்பாயா போன்ற பல சிறு படங்கள் வெளிவந்தாலும், அவை எந்த தடமும் இல்லாமல் மறைந்துவிட்டன.
இந்த வருடத்தின் ஆரம்பம் ஏமாற்றத்தை மட்டுமே தந்தாலும், வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் படங்கள் இந்த நிலையை மாற்றுமா அல்லது இந்த மோசமான ஓட்டமே தொடருமா என்பது இப்போதைக்கு பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்தான்.
- குரு கிருஷ்ணன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications