ராதிகாவுக்கே இந்த நிலையா.. ஏன் என்னாச்சு.. பரபரக்கும் டிவி வட்டாரம்
Recommended Video

சென்னை: ராதிகாவின் சந்திரகுமாரி சீரியலை திடீரென சாயந்திரத்திற்கு மாற்றி விட்டனர். இதுதான் டிவி உலகை கலக்கி வரும் பரபரப்பு. ராதிகாவுக்கே இந்த நிலைமையா என்று பேச ஆரம்பித்து விட்டனர் வியூவர்ஸும் .
சன் டிவி சேனலுக்கும், ராதிகாவுக்கும் ஏதேனும் மோதலா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. காரணம், இதுவரை இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ராதிகாவின் எந்தத் தொடரும் வேறு நேரத்திற்கு மாற்றப்பட்டதில்லை.
ஆனால் வெற்றிகரமாக ஓடி வரும் சந்திரகுமாரி சீரியலை மாலை 6.30 மணிக்கு மாற்றியுள்ளதாக ராதிகாவே தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ராதிகாவின் சீரியல்கள் இரவு நேரத்தில் பிரைம் நேரத்தில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்துள்ளது. அவருக்காக மற்ற சீரியல்களை மாற்றியுள்ளனரே தவிர அவரது சீரியலை தொடக் கூட மாட்டார்கள்.
|
முதல் முறையாக
ஆனால் முதல் முறையாக ராதிகாவின் முக்கியமான தொடர் ஒன்று பிரைம் டைமை விட்டு அகற்றப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது என்ற கேள்விகளையும் அது எழுப்புவதாக உள்ளது.

தொடர்ந்து அதே இடம்
ராதிகாவின் ரடான் தயாரித்த மிகப் பெரிய தொடர்கள் எல்லாமே இரவு 9.3 மணி ஸ்லாட்டில்தான் ஒளிபரப்பாகி வந்தது. காவேரி, சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என மெகா ஹிட் தொடர்கள் அதில் முக்கியமானவை.

யாருக்கும் கிடையாது
இந்த இடத்தை கிட்டத்தட்ட ராதிகாவுக்கே பட்டா போட்டு கொடுத்து விட்டதா சன் டிவி என்று கேட்கும் அளவுக்கு அதே இடத்தில் தொடர்ந்து தனது தொடர்களை வழங்கி வந்தார் ராதிகா. அது ராசியான ஸ்லாட்டாகவும் அவருக்கு இருந்து வந்தது.

ஏன் திடீர் மாற்றம்
தற்போது இந்த இடத்தை ஏன் திடீரென மாற்றியுள்ளனர் என்பது தெரியவில்லை. சானலுடன் மோதலா அல்லது இந்த இடத்தில் ராதிகாவின் வேறு ஏதாவது தொடர் வரப் போகிறதா என்றும் தெரியவில்லை.
|
வாசகர்கள் ஆதரவு
இருப்பினும் ராதிகாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நேர மாற்றத்தைப் பிடிக்காமலும் அவரது ரசிகர்கள், தொடர்ந்து கருத்துக்களை டிவிட்டரில் போட்ட வண்ணம் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications