பிக்பாஸ் இதுக்கு பதில் சொல்லுங்க.. ரம்யாவை எதுக்கு வெளியேற்றினீர்கள் ?
ரம்யாவை பிக்பாஸ் வெளியேற்றியதற்கு காரணங்களை பிக்பாஸ் சொல்ல வேண்டும்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் ரம்யா வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவரும் பொதுமக்களுக்கு மேலும் பல எதிர்மறை உணர்வுகள், கருத்துக்களைதான் தந்துள்ளது.
பிக்பாஸ் -2 ஆரம்பித்ததிலிருந்தே சொதப்பல்கள்தான் ஏராளம். குறைகள் தான் அதிகம். அதை நெட்டிசன்களும், பொதுமக்களும் தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டுதான் வருகிறார்களும். ஆனாலும் எந்த குறைகளையும் பிக்பாஸ் சரி செய்து கொள்வதுபோல் தெரியவில்லை. அது நேற்றைய நிகழ்ச்சியிலும் பகிரங்கமாகவே தென்பட்டது.

நியாயமான காரணம் உண்டா?
பிக்பாஸ்... ரம்யாவை எலிமினேட் செய்ய ஏதாவது நியாயமான காரணம் இருக்கா?
ரம்யாவை எலிமினேட் செய்ய ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கா? ஏன் ரம்யாவை வெளியே அனுப்ப வேண்டும்?
வீட்டிற்குள் ஆக்ரோஷமாக சண்டை போடாமல் ரம்யா இருந்தாரே, அதற்காக அனுப்பிவிட்டீர்களா? ஐஸ்வர்யா, யஷிகாவை விட ரம்யா ஆபாசமாகவும் உடை அணியாமல் இருந்தாரே அதற்காக அனுப்பி விட்டீர்களா?
மஹத்-தைபோல் இரட்டை அர்த்தம் பேசாமல் இருந்தாரே அதற்காக அனுப்பிவிட்டீர்களா?
இல்லை, ஒட்டுமொத்தமாக தமிழ்க்கலாச்சாரத்தை மீறிவிட்டார் என்பதற்காக அனுப்பிவிட்டீர்களா?

கால்தூசு தவறுதான்
நித்யாவை அனுப்பியதையே இன்னும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், அடுத்தது பொறுமையும் பக்குவமும், அமைதியும் ததும்ப வீட்டினுள் உலா வந்த ரம்யாவை வெளியேற்றியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ரம்யா தலைவியாக இருக்கும்போது, பாதியிலேயே தனது பொறுப்பை கைவிட்டார். அது தவறுதான். ஆனாலும், வீட்டிற்குள் நாள்தோறும் அரங்கேறும் சேட்டைகள், அட்டூழியங்கள், கலாச்சார மீறல்களுடன் ஒப்பிடும்போது ரம்யாவுடையது என்னவோ "கால் தூசி" தவறுதான்.

இதற்கு எதற்கு கமல்?
யார் யாரெல்லாம் நிகழ்ச்சி பரபரப்பாக ஆக்கவில்லையோ, யார் இருந்தால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லையோ அவங்கள எவிக்ஷன் என்ற பேரில் வீட்டுக்கு அனுப்புவதா? அது பிக்பாஸ் நிகழ்ச்சியை தினந்தோறும் பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கே தெரிந்துவிடுமே, 'இந்த வாரம் இவர்தான் எலிமினேட் என்று. இதற்கு எதுக்கு மக்கள் கருத்து கணிப்பு? இந்த முடிவுகளை அறிவிக்க எதற்கு கமல்? பேசாம நீங்களே டிஆர்பி ரேட் பாத்து போட்டியாளர்களை வெளியே அனுப்பிட்டா நல்லாருக்குமே.

தப்பித்தார் ரம்யா
எனவே பிக்பாஸ்-ன் திருவிளையாடல்கள் எல்லாம் அப்பட்டமாக ஜனங்களுக்கு தெரியும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் இது தேவையா? ஆனால் நீங்கள் ரம்யாவை வெளியேற்றியதிலும் ஒரே ஒரு நல்லது நடந்துள்ளது. இதுபோன்ற போலித்தனமான கும்பலிலிருந்து, முகமூடி அணிந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து அவரை விடுவித்து அனுப்பியது ரம்யாவுக்கு நல்லதுதான்! நிம்மதிதான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications