ஜெய் ஹனுமான்.. விநாயகா.. ஷீர்டி சாய்னு இருந்தோம்... இப்படி செஞ்சுட்டீங்களே!
சென்னை: சன் டிவியில் காலை 9 மணிக்கு ஜெய் ஹனுமானின் ஆரம்பித்து, ஷீர்டி சாயிபாபா வரை மூணு பக்தி சீரியல் டெலிகாஸ்ட் ஆயிட்டு இருந்துச்சு.. இப்போது அது மிஸ்ஸிங்.
ஜெய் அனுமன், விநாயகா, சீரடி சாய்னு மூணு பக்தி சீரியல் நல்லாத்தானே பார்த்துட்டு இருந்தோம்...என்னாச்சு இந்த சன் டிவிக்கு, அந்த நேரத்துல ஒண்ணு படத்தை போட்டுடறாங்க.... இல்லையா ஏதானும் புரோகிராம் போட்டுடறாங்க..

என்ன பண்றது.. .ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு இருக்க வேண்டிய வயசுல.. சன் டிவியில இதையானும் நம்ம போல வயசானாவாளுக்கு போடறாளேன்னுட்டு ஆசையா பார்த்ததுண்டு இருந்தோம். இதையும் மாத்திட்டா.. சரி மத்த நேரத்துல போடுவாளாக்கும்னு நினைச்சுண்டு இருந்தேன்.. சுத்தமா ஊத்தி மூடிட்டா..

அம்மா.. அப்பா ஏன் இப்படி கார்த்தால புலம்பிண்டு இருக்கேள்னு மருமக கேட்கறா. இல்லடி கொழந்தே.. நீயும், புள்ளையாண்டானும் ஆபீஸுக்கு போயிடறேள்.. எங்களுக்கு காலையில நன்னா பொழுது போயிண்டு இருந்துது.. இந்த மூணு பக்தி சீரியல் பார்த்துட்டுத்தான் நானும், மாமாவும் கார்த்தால டிபன் சாப்டுண்டு இருந்தோம். அது ஒரு விரதம் மாதிரின்னா இருந்துச்சு.
சரிம்மா.. அதுக்கு இப்போ என்னவாம்.. உங்களை யாரு சீரியல் பார்க்க வேணாம்னுட்டு சொன்னது... குழந்தைங்க யாராவது ஏதானும் சொல்லி, டிவி பார்க்கப்படாதுன்னாட்டாளா..

அதெல்லாம் ஒண்ணும் இல்லடி கொழந்தே.. நம்மாத்து குழந்தையளும்தான் கவலையில இருக்காங்க. நீ வேற காலையில செல்போன் எடுத்து கேம் விளையாட கூடாதுன்னு சொல்லிட்டியோ இல்லியோ.. நாங்க இந்த பக்தி சீரியலை பார்க்க வச்சுண்டு கதையும் சொல்லிண்டு இருந்தோம்.
இப்போ. சன் டிவியில் இந்த மூணு சீரியலையும் ஒளிபரப்பறதை நிறுத்திட்டா தெரியுமோ.. இந்த தெலுங்கு வருடப் பிறப்புலேர்ந்து இப்படித்தாண்டிமா அல்லாடறோம்...

சரி சரி விடுங்கோம்மா... என்னென்ன புராண கதைகள் வேணும்னுட்டு லிஸ்ட் எழுதி குடுங்கோ.. சாயங்காலம் வந்து நெட்ல டவுன்லோடு பண்ணித் தரேன்.. நீங்க மாத்தரம் பார்க்காம குழந்தைங்களையும் கூட வச்சுண்டு பாருங்க..

லீவ் நாட்களில் அவா நல்லதை கத்துண்ட மாதிரியும் இருக்குமோன்னோ.. எத்தனை நாளைக்குத்தான் பீச், பிக்னிக்னு அழைச்சுண்டு போறது.. சொந்தக்காரா வீட்டுல மட்டும் எத்தனை நாள் தங்க முடியும். இந்த நேரத்துல இதெல்லாம் தெரிஞ்சுண்டாதான் உண்டும்மான்னு சொல்லிட்டு, போறாங்க மருமக.
ஆமா, சன் டிவி பாதியிலேயே தினம் ஒளி பரப்பின மூணு பக்தி சீரியல்களை நிறுத்தியது ஏன்? இது தப்பில்லையோ... செத்த கவனிக்கப்படாதா!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications