Kaatrin Mozhi Serial: எதுக்காக இந்த சஞ்சீவ்.. விடாம பிடிச்சு வச்சுக்கிட்டு?
சென்னை: விஜய் டிவி குளிர் 100 நடிகர் சஞ்சீவை எதுக்காக விடாம பிடிச்சு வச்சு இருக்காங்க? ராஜா ராணி சீரியலில் நடிக்க வச்சு ஒரு குடும்பமே அமைச்சு குடுத்தாட்டங்க.
அத்தோட விட்டுட வேண்டியதுதானே? ஒரு நடிகருக்கு உண்டான எந்த குவாலிஃபிகேஷனும் வச்சுக்கலை இந்த நடிகர்.
அதுதாங்க.. ஃபிட்னெஸ் இல்லை... முகத்தில் எந்த வித ஃபீலிங்க்ஸும் காண்பிக்கத் தெரியலை.

காற்றின் மொழி சீரியல்
காற்றின் மொழி சீரியலில் கண்மணி வாய் பேச முடியாத பொண்ணா உயிரை கொடுத்து நடிக்குது. இவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாம டப்பிங் குரலில் வெறுமனே பேசிவிட்டு போறார். சும்மா பணக்கார பையனா வந்துட்டு போறதுக்கு மட்டும் சஞ்சீவ் நடிக்க வேணுமா உங்களுக்கு?

விஜய் டிவி
விஜய் டிவி நிறைய திறமை சாலிகளுக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுத்து மகிழ்வாங்க. நிறைய திறமை சாலிகளை தக்க வைத்தும் அழகு பார்ப்பார்கள். அப்படிப்பட்ட விஜய் டிவி சஞ்சீவ் போன்ற திறமையே இல்லாதவர்களுக்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்து மற்றவர்களின் திறமையை பறிப்பது ஏனோ?

சும்மா பொம்மையா
சும்மா பொம்மையா வந்து போறதுக்கு மட்டும்தான் என்றால் ராஜ ராணியோடு சஞ்சீவை நிறுத்தி இருக்கலாம். அதே கம்பெனிதான் என்றால் சஞ்ஜீவ்க்காக இந்த கதையை வேலை மெனக்கெட்டு எடுக்கிறார்களா? ஆட்களை தேர்வு செய்துவிட்டு சீரியலை எடுப்பதற்கு நீங்கள் தனி டெலிவிஷன் நடத்தலாமே...

திணிக்க வேண்டாம்
நீங்கள் முடிவு செய்துவிட்டு, அதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று மக்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் சானலை மாற்றினால் உங்கள் ரேட்டிங் அவ்வளவுதான். ஏதோ காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணி அழகாக இருக்கிறாள், நன்றாக நடிக்கிறாள் என்பதற்காக அவர்கள் சீரியல் பார்க்கிறார்கள். அவர்கள் பொறுமையை இனியேனும் சோதிக்காதீர்கள்.
நடிகர் என்பதற்கு உரிய லட்சணங்களை கூட காத்துக் கொள்ள தெரியாமல் இருப்பவருக்கு என்ன நடிகர் என்கிற அடையாளம் வேண்டி இருக்கிறது?
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications