மீனாவுக்கு பாஜகவில் போஸ்டிங் இதுவா? அதைவிடுங்க, அவங்க அம்மா இந்த பிரபலமா? அட நேரெதிர் கூடாரமாச்சே?
சென்னை: நடிகை மீனா குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்காரை நேரில் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. இதையடுத்து, மீனா அரசியலில் காலெடுத்து வைக்கப்போகிறீர்களா? பாஜகவில் இணைய போகிறீர்களா? மத்திய அமைச்சராக போகிறீர்கள் என்று பரவும் செய்தி உண்மையா? என்றெல்லாம் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில், பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Behind Talkies Voices என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், "மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்று அனைவருக்குமே தெரியும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்து, அதே ரஜினிகாந்த்துடன் கதாநாயகியாக நடித்தவர்.. மிகச்சிறந்த நடிகை..

பல மொழிகளில், முன்னணி நடிகையாக நடித்து, பிறகு, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.. உடல்நலக்குறைவால் கணவர் பாதிக்கப்பட்டபோது, 2 வருடமும் அவரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்..
சபாஷ் - முடங்கிவிடவில்லை
கணவர் இறந்தபிறகும்கூட, முடங்கிப்போய்விடாமல், அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி செல்கிறார்.. சோஷியல் ஆக்டிவிட்டிஸ்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்.. நெப்போலியன் மகன் திருமணத்துக்கும் அமெரிக்கா சென்று வந்தார்..
அதுமட்டுமல்லாமல், பிரதமரின் நிகழ்ச்சிக்கு செல்வது, தணை ஜனாதிபதியை சந்தித்து உட்பட, பாஜக வட்டாரத்தில்தான் அதிக நெருக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. எனவே பாஜகவிலும் மீனா இணையலாம். அப்படி இணைந்தால், பெரிய பதவிகளை உடனே யாருக்கும் தந்துவிட் மாட்டார்கள்.
மத்திய அமைச்சர் பதவி
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மத்திய அமைச்சராக வேண்டும் என்று பலரும் காத்திருக்கிறார்கள்.. அந்தவகையில் பெரிய லிஸ்ட்டே உள்ளது.. எனவே, புதிதாக சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், மத்திய அமைச்சர் பதவி தரமாட்டார்கள்..
கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட் பீரோ உள்ளதுபோல, பாஜகவிலும் தேசிய தலைமை உள்ளது.. எனவே, பரிந்துரைகள் செய்துதான் பதவிகளை வழங்குவார்கள்..
அந்தவகையில் மீனாவை தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம். காரணம், தற்போது பாஜகவில் குஷ்பு மட்டுமே பரிச்சயமான பிரபலமான நடிகையாக உள்ளார்.. எனவே, மற்றொரு முகமாக மீனாவை கொண்டு வரலாம். ஏற்கனவே உயர்ந்த பதவியை எதிர்பார்த்து அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பு, தமிழிசை சவுந்தராஜன் போன்ற மூத்த தலைவர்கள் உள்ளனர். எனவே, மீனாவுக்கு ஒரு பொறுப்பு தந்து, பிரச்சாரத்துக்கு பாஜக பயன்படுத்தலாம்.
சிங்கமுத்து - வடிவேலு
அதிமுகவில் 2011-ல் கூட்டணி வைத்த விஜய்காந்த்தை விமர்சிக்க சிங்கமுத்துவை பிரச்சாரத்துக்கு இறக்கினார்கள்.. அப்போது திமுகவுக்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததால், வடிவேலுவை விமர்சிக்க, வடிவேலு கூட நடித்த சிங்கமுத்துவை கொண்டு வந்தார்கள். இதனால் திமுக + வடிவேலு இருவரையுமே விமர்சனம் செய்ய முடியும் என்று அதிமுக கணக்கு போட்டு சிங்கமுத்துவை பிரச்சாரம் செய்ய வைத்தது.
இதுபோல தேர்தல் சமயத்தில், சினிமாவிலிருந்து நடிகர் நடிகைகளை பிரச்சாரத்தில் போட்டிபோட்டு இறக்கிவிடுவது அனைத்து கட்சிகளிலுமே இருக்கக்கூடிய விஷயம்தான்.. அந்தவகையில், வரப்போகும் தேர்தலிலும் நடக்கலாம்.
அதற்காக தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கவே மீனாவையும் பிரச்சாரத்துக்கு பாஜக பயன்படுத்தலாம் என்று கணிப்பது சரியான ஒப்பீடாக தெரியவில்லை.. விஜய்க்கு நிகரான நடிகரை பிரச்சாரத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே அது சரியான ஒப்பீடாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
மீனாவின் அம்மா
கடந்த மாதம் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "சின்ன வயதிலிருந்தே மீனாவுக்கு எல்லாமே அவரது அம்மாதான். அந்த நேரத்தில் மீனாவின் அம்மா காங்கிரஸில் இருந்தார்.. மீனாவின் அம்மா பெயர் ராஜ் மல்லிகா.. நடிகையாக இருந்தவர்... பிறகு காங்கிரஸ் கட்சியில் பங்காற்றினார். அப்போது மீனா குழந்தை நட்சத்திரமாக இருந்தார்..
இந்திரா காந்தி, மூப்பனார்
மீனா நிறைய காமிக்ஸ் புத்தகங்களை படிக்கக்கூடியவர் என்பதால், கடைகளுக்கு அழைத்து சென்று புத்தகங்கள், சாக்லட்டுகளை வாங்கி தந்துவிட்டு, அவரது அம்மா அரசியல் கூட்டங்களுக்கு செல்வார். தேசிய காங்கிரஸில் பொறுப்பிலும் இருந்தவர்..
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மூப்பனார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்.. இந்திரா காந்தி பங்கேற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்றவர் மீனாவின் அம்மா என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications