குழப்பியடித்த வினோதினி? பிழைப்புக்காக வேற கட்சி மாறுவேன்னு நினைச்சீங்களா? நடிகையின் தெளிவான பதில்
சென்னை: கடந்த வருடம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த நடிகை வினோதினி, திடீரென அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.. இதற்கான காரணம் என்ன என்றுதான் இணையவாசிகள் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, வேறு கட்சியில் வினோதினி இணைவாரா? என்ற சந்தேகமும், ஆர்வமும் அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான "எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன்.. இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

அதேசமயம், எந்நேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர்.. இவரது பெரும்பாலான பதிவுகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தே இருப்பதால், இந்த பதிவுகள் அனைத்துமே வைரலாகி, மக்களின் கவனத்தை பெற்றுவிடும். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வருடம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
கட்சியில் இணைந்ததிலிருந்தே, மய்யத்திற்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வந்தார். தற்போது மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்..
நம்மவர்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விலகல் அறிக்கையை பதிவிட்டிருந்தார்.. அதில், "நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல,வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தொடர்ந்து பயணிப்போம்" என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இருப்பதாக வினோதினி பதிவிட்டிருந்தது, தற்போது வரை மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது. அப்படியானால், கமல் கட்சியில் என்ன நடந்தது? வேறு கட்சிக்கு வினோதினி செல்ல போகிறாரா? போன்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
வினோதினி: இப்படிப்பட்ட சூழலில்தான் Kumudam யூடியூப் சேனலுக்கு வினோதினி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில்,
விஜய் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.. இப்போதுதான் அவர் களத்துக்கு வந்துள்ளார்.. ஆனால், அரசியல் களத்திலேயே கமல் இல்லையே? நீங்கள் நடிகர் விஜய் விஜய் கட்சியில் சேர போகிறீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வினோதினி, அந்த காரணம் எனக்கு தெரியாது, அந்த வருத்தம் எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. நான் விஜய் கட்சியில் சேர போவதில்லை.. அதற்கான எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை.. அப்படியே அழைப்பு வந்தாலும், நான் விஜய் கட்சியில் இணைவதாக இல்லை.. காரணம், 2018-ல் மக்கள் நீதி மய்யம் துவங்கியதுமே, அதன் நடுநிலைத்துவம் என்ற கொள்கை எனக்கு பிடித்திருந்தது. அதனால், அடுத்த மாதமே அந்த கட்சியில் இணைந்தேன்.
இந்துத்துவா: அந்தவகையில், ஒரு கொள்கை ரீதியாகத்தான், அக்கட்சியில் இணைந்தேன். அதே கருத்தியல் ரீதியான காரணங்களை முன்வைத்துதான்வெளியே வந்துள்ளேன்.. எத்தனையோ நடிகர், நடிகைகள் பிழைப்புவாதத்துக்காக, ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு தாவுவதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். நான் அப்படி இல்லை. இந்துத்துவாவுக்கு எதிரானவள்.. எனினும், அரசியல் களத்தில்தான் நான் தொடர்ந்து இருப்பேன்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications