ஆஹா.. அர்ஜூன் அப்பா ரூமிலும் ஃபேன் சுத்தலையாமே.. அப்ப கல்பனா நிலைமை!!
சென்னை: ரோஜா சீரியலில் அர்ஜுன் மட்டும்தான் ரொமான்ஸ் பண்ணுவானா.. நானும் பண்றேன் பாருன்னு கிளம்பி இருக்கார் அர்ஜுன் அப்பா. செம காமெடிதான்..
கல்பனா மாடியில ஃபேன் சுத்தலைன்னு, அர்ஜுன் ரோஜாவைத் தூக்கி விட்டு சுத்த சொன்னதை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டே கீழ இறங்கி வர்றாங்க.

மருமகளே என்ன இப்படி சிரிச்சுக்கிட்டு வர்றே? சும்மாவே கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு இருப்ப.. இப்போ என்னாச்சுன்னு மாமியார் கேட்கறாங்க. அது வந்து அத்தே.. அது வந்து அத்தேன்னு சொல்லிட்டு சிரிக்க..அதை ஏன் கேட்கறீங்க அத்தேன்னு சொல்றா. சரி போறேன்னு சொல்லிட்டு மாமியார் போக, இருங்க அத்தே நான் சொல்றேன்னு கல்பனா ஆரம்பிக்கறாங்க.
நம்ம வீட்டுல ஃபேன் சுத்தலேன்னா என்ன பண்ணுவோம்னு கல்பனா கேட்க, வேலைக்காரி சுமதி சீப்பை வச்சு சுத்துவோம்னு சொல்றா. அப்படித்தானே செய்வோம்.. அர்ஜுன், ரோஜாவை தூக்கிவிட்டு சுத்திவிட சொல்றான் அத்தைன்னு சிரிக்கறா.
போதும் போதும்.. நீ வெட்கப்பட்டது...வாசலில் தோரணம் கட்டணும்னா அர்ஜுன் ரோஜாவை தூக்கிருவான். தூசு அடிக்கணும்னா ரோஜாவைத் தூக்கிக்குவான்.. இதே வேலையா போச்சா அவனுக்குன்னு மாமியார் சொல்றாங்க.
இதை மறைஞ்சு நின்னு கேட்டுகிட்டு இருந்த அர்ஜுனின் அப்பா, ஹாலுக்கு வந்து கல்பனா ரூம்ல ஃபேன் ஓடலை, வா என்னன்னு பார்ப்போம்னு சொல்ல, வேலைக்காரி சிரிக்கறா. கல்பனாவும் வெட்கப்பட்டுக்கிட்டு அய்யோன்னு சிரிக்கறா..
கல்பனா அப்படியே வெட்கத்தில் நிற்க, கல்பனா சீக்கிரம் வான்னு கூப்பிடறார் கணவர். மருமகளே நீயாவது போம்போது கொம்பு எடுத்துட்டு போயி அதுல சுத்திவிடு. என் புள்ளையால உன்னை எல்லாம் தூக்க முடியாதுன்னு சொல்லிட்டு போறாங்க
வெட்கத்தில் போங்க அத்தேன்னு சொல்லிட்டு, சுமதிக்கா உங்க வேலையை பாருங்கன்னு சொல்லிட்டு போறா கல்பனா. குடும்பத்துல இது மாதிரியான காட்சிகள் நல்லாத்தான் இருக்கு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications