ஹிட் தந்த வெற்றிமாறன், துள்ளுவதோ இளமை ரேஞ்சுக்கு இறங்கி? பிரபலம் நறுக்.. பேட் கேர்ள் பட எதிர்ப்பு
சென்னை: "பேட் கேர்ள் படம் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய படம்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது நிச்சயம் என்று பல்வேறு தரப்பினர் சொல்லி வரும் நிலையில், பிராமணர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. A சான்றிதழுடன் சென்சார் போர்டு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று சென்சார் போர்டையும் கண்டித்திருக்கிறது.
"பேட் கேர்ள்" படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.. சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பல விசயங்களை உடைத்து பெண்களின் குரலை பேசுவதாக இந்த படம் உள்ளதாக கூறப்படுகிறது.

பிராமண சமுதாயம்: அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. அந்தவகையில், பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
அதேபோல, AG Modern Media யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள ஒரு பேட்டியிலும் காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.. "துள்ளுவதோ இளமை" என்ற படரேஞ்சுக்கு இறங்கி, பேட் கேர்ள் படத்தை தயாரித்திருக்கிறார் வெற்றிமாறன்.. எழுதி வைத்து கொள்ளுங்கள், பேட்கேர்ள் படம் வசூலில் சாதனை புரிய போகிறது. காரணம், இதுக்கு ஏகப்பட்ட புரமோஷன்கள்.. இது எவ்வளவு மோசமான படம்?
பட்டியலினம்: இந்த சாதி என்று சொல்லாமல் அந்த ஹீரோயினை காட்டியிருக்கலாமே? ஏன் இழிவுப்படுத்த வேண்டும்? பட்டியலினத்தை தவறாக சித்தரித்துவிட்டால் மட்டும், பா.ரஞ்சித், வெற்றிமாறன் கூக்குரல் எழுப்புகிறார்கள். இப்போது இந்த படத்தில் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மோசமாக காட்டியிருப்பது தவறில்லையா? உங்களுக்கொரு நியாயம், பிராமண பெண்ணுக்கு ஒரு நியாயமா? இந்த படத்தின் டிரெயிலரை எப்படி அனுமதித்தார்கள்? என்று தெரியவில்லை.. சென்சார்களும் இதை விரும்புகிறதா தெரியவில்லை" என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில், பேட் கேர்ள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் நாராயணன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
பட தயாரிப்பாளர்: "பேட் கேர்ள் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. இதில், பிராமணர் சமுதாயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இளம் தலைமுறை பெண்களை, மிகவும் கேவலமாக சித்தரித்திருப்பது வேதனை அளிக்கிறது. பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், மிகப்பெரிய நிலை தடுமாற்றத்திற்கு ஆளாகி, இளம் தலைமுறையினரை பெரும் கலாசார சீரழிவை நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.
இப்படத்தில் காட்டி உள்ள, இளம்தலைமுறையின் தவறான வாழ்க்கை முறையை, ஏதோ பெண்ணுரிமை போல காட்டியுள்ள, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சென்சார் போர்டு: இப்படத்திற்கு, A சான்றிதழுடன் சென்சார் போர்டு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும், சென்சார் போர்டு அனுமதியை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை பெரும் சர்ச்சையாகி உள்ள இந்த தருணத்தில், பேட் கேர்ள் படத்திற்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications