என்னாது நீயா நானா கோபிநாத் தூங்கும் போது கோட் சூட்டோடத்தான் தூங்குவாரா?
சென்னை: நீயா நானா விவாத நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் இரவு தூங்கும் போதும் கோட் அணிந்து கொண்டுதான் தூங்குவாரா?
விஜய் டிவியில் நிறைய பொழுதுபோக்கு ஷோக்கள் வந்துள்ளன. நடனம், பாடல் உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்த ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.
காமெடியை வெளிப்படுத்த அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. அது போல் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி... இப்படி விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சப்ஜெக்ட்
ஒரு சப்ஜெக்ட்டை எடுத்து அது குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சியான நீயா நானா நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல்வேறு விஷயங்கள், அதாவது பிற்போக்குத்தனம் வெர்சஸ் முற்போக்குத்தனம், ஜோதிடத்தில் நம்பிக்கை வெர்சஸ் நம்பிக்கை இல்லாதவர்கள் என பல்லாயிரம் டாப்பிக்குகளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

கோட்
இந்த நிகழ்ச்சியில் கோட் அணிந்து கொண்டு கோபிநாத் நடத்தி வருகிறார். எனவே கோட் என்றால் கோபிநாத் என்ற அளவுக்கு டிரேட்மார்க்காகிவிட்டது. விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கோபிநாத்தின் கோட்டை வைத்து கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலர் கோபிநாத் தூங்கும் போது கூட கோட் போட்டுக் கொண்டுதான் தூங்குவார் என கூறி வருகிறார்கள்.

விடை
என்னாது தூங்கும் போது கோட்டு போட்டு கொண்டு எப்படி தூங்குவது என பலரும் விடை தெரியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் இதற்கான விடையை அவரே நேற்று நடந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கோபிநாத் விளக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் திலிபன் தம்பதி நடனம் ஆடினர்.

விஜய் டிவி
பேய் வேடமிட்டு இவர்கள் நடனமாடிய போது விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் காமெடி போட்டியாளர் ஒருவர் கோட் சூட் அணிந்து கொண்டு கோபிநாத் கெட்டப்பில் கலந்து கொண்டார். இதில் நெற்றியில் "சாரி கோபி அண்ண" என எழுதியிருந்தார். இந்த நடனம் முடிந்த பிறகு கோபிநாத் விழுந்து விழுந்து சிரித்தார்.

பேய் வேஷம்
பேய் வேஷம் போட்டாலும் என்னை விடமாட்டீங்களாடா.. அதுவும் கோட் போட்ட பேய் , நான் தூங்கும்போதும் கோட் போட்டுகிட்டுதான் தூங்குவேனு இன்னும் பல பேர் நம்பிகிட்டு இருக்காங்க. அப்படியெல்லாம் இல்லவே இல்லை. இதில நீ வேறயாடா என நகைச்சுவையாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications