ஜாக்குலினுக்கு விரித்த வலை.. பிக்பாஸ், குக் வித் கோமாளி.. பிரியங்காவை விடாத விஜய் டிவி.. பலே கணக்கு
சென்னை: பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் இந்த முறை விஜய் டிவி பிரபலங்களே, அதிகமாக பங்கேற்க போவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், தொகுப்பாளர் ஜாக்குலின் பெயரும் வலுவாக அடிபடுகிறது. இதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் உள்ளதா?
பிக்பாஸ் 8வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.. இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார்.. விஜய் சேதுபதி கமல் பாணியையே கையில் எடுப்பாரா? அல்லது புதுபாணி ஏதாவது கைவசம் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.. அதனால்தான், இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

வழக்கமாக, எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கினாலும், அதில் பங்கேற்பவர்கள் யார்? என்பது குறித்த விவாதம், ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே துவங்கிவிடும்.. அதுபோலவே இந்த முறையும், பல்வேறு அனுமானங்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. பவித்ரா ஜனனி, அன்ஷிதா, ரஞ்சித், பப்லு பிரிதிவ்ராஜ், பூனம் பஜ்வா, குரேஷி, அமலா ஷாஜி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லலாம் என்றார்கள்.
புது லிஸ்ட்: ஆனால், குக் வித் கோமாளி பிரபலங்கள் தான் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களாம்.. இதுசம்பந்தமான ஒரு லிஸ்ட் நேற்றுமுதல் வலம் வந்துகொண்டிருக்கிறது.. தர்ஷா குப்தா, விஜே விஷால், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா, காதல் ஜோடியான சோயா, டிடிஎஃப் வாசன், அன்ஷிதா, அர்ணவ், கார்த்திக் குமார், என இன்னொரு லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.
ஆகமொத்தம், போட்டியாளர்கள் இதுவரை உறுதியாக தெரியாவிட்டாலும், விஜய் டிவியில் இருந்து தற்போது காணாமல் போன தொகுப்பாளினி ஜாக்குலின் பெயரும் அடிபட்டு கொண்டேயிருக்கிறது. பிக்பாஸ் என்றில்லை, மணிமேகலை விவகாரம் பற்றிக்கொண்டு எரிந்தபோதுகூட, ஜாக்குலின் பெயர் அடிபட்டது. ஜாக்குலின், டிடி போன்றோர் எல்லாம் மீண்டும் விஜய் டிவக்குள் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.
ஜாக்குலின்: இதற்கு பிறகுதான், பிக்பாஸ் வீட்டிற்குள் ஜாக்குலின் வரப்போவதாக தகவல்கள் வலம் வந்தன.. இதற்கு பின்னணியில் விஜய் டிவியே இருக்கலாம் என்றுகூட சொல்கிறார்கள்.
காரணம், பிரியங்காவால்தான், பெரும்பாலான பெண் தொகுப்பாளர்கள் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக, சோஷியல் மீடியாவில் செய்திகள் பரபரத்தன. பிரியங்கா மீதான அதிருப்திகளை பதிவு செய்வோர்கூட, விஜய்டிவியை இடித்துரைத்தே தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். எனவே, ஜாக்குலினை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வருவதன்மூலம், சேனல் மீதிருக்கும் அதிருப்திகள் மெல்ல விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.
மகிழ்ச்சி: அதனால்தான், பிரியங்கா - மணிமேகலை விவகாரம் குறித்து, மற்றவர்கள் எல்லாம் கருத்து சொல்லியிருந்த நிலையில், ஜாக்குலின் எந்த மட்டும் எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, பிக்பாஸ் 5 ஆவது சீசனில் ஜாக்குலின் கலந்துகொள்ளப்போவதாக கூறப்பட்டது.. இவரை தவிர தொகுப்பாளினி பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகத் தகவல் வெளியானது. இறுதியில் பிரியங்கா மட்டுமே பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார்.. பிரியங்காவால்தான், ஜாக்குலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா? என்று அப்போதே சில முணுமுணுப்புகள் வலம்வந்தன.
சலசலப்புகள்: இதுபோன்ற சலசலப்புகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே ஜாக்குலினை, போட்டியாளராக விஜய் டிவி தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.. இந்த தகவல் உண்மையா? அல்லது இந்த முறையும் ஜாக்குலின் பங்கேற்கவில்லையா? என்பது தெரியவில்லை.. ஒருவேளை ஜாக்குலின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால், அவரது ரசிர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தரும் என்பதுடன், விஜய் டிவிக்கும், பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்கிறார்கள்..
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. சில தினங்களுக்கு மணிமேகலை விவகாரம் வெடித்து கிளம்பியபோது, குக் வித் கோமாளி சீசனை தொகுத்து வலுங்க, ஜாக்குலின் சரியான தொகுப்பாளராக இருப்பார் என்று விஜய் டிவியே நினைத்ததாம்.
குத் வித் கோமாளி: ரக்சன் உடன் ஜாக்குலினும் சேர்த்து தொகுத்து வழங்கினால், ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாது, பிரியங்கா மீதான அதிருப்தியும் மெல்ல விலகும் என்று கணக்கு போட்டதாம். ஆனால், அதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.. எனவே எப்படிப்பார்த்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அல்லது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என ஏதாவது ஒன்றில் ஜாக்குலினை விஜய் டிவிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications