இவர்தான் அடுத்த "முல்லை"யா.. பரபரக்கும் டிவி உலகம்!
சென்னை: இவர்தான் அடுத்த முல்லையா.. இந்தக் கேள்வியுடன் பல ஸ்டோரீஸை பலரும் போட்டுக் கொண்டே போகின்றனர் .ஆனால் எதுவுமே இன்னும் உறுதியாகத் தெரியவில்லை .ஆனால் தற்போது காவியாவின் பெயர் அடிபடுகிறது.
காவியா வேறு யாரும் அல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருபவர்தான். அதில் கண்ணம்மாவின் நாத்தனராக, அதாவது பாரதியின் தங்கையாக வருகிறார்.
அந்த சீரியலில் அவரது கேரக்டர் பெயர்தான் அறிவு. அந்த அறிவுதான் இப்போது முல்லையாக அவதாரம் எடுக்கப் போவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முல்லை யார்
முல்லையின் பாத்திரத்தில் வேறு ஒறுவரை ஏற்கவே முடியாது .அதையும் கொன்று விடுங்கள் என்றுதான் பலரும் கூறி வருகின்றனர் .காரணம் சித்ரா ஏற்படுத்தி வைத்துள்ள தாக்கம் அப்படி .அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் ரசிகர்கள் .ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிக நடிகையரும் கூட அப்படித்தான் பேசுகிறார்கள்.

சித்ராவும் முல்லையும்
அந்த அளவுக்கு முல்லையாக வாழ்ந்து விட்டுப் போய் விட்டார் சித்ரா .அவரைத் தவிர வேறு யாரையுமே கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை .முல்லை என்ற பெயரைக் கேட்டால் முன்பெல்லாம் பூவின் நினைவுதான் வரும் .ஆனால் இப்போது சித்ராதான் ஞாபகத்திற்கு வருகிறார் .அந்த அளவுக்கு முல்லை என்ற பெயருக்கே ஒரு தனி கலரை கொடுத்து விட்டார் சித்ரா.

சரண்யா நடிக்கலை
இப்போது முல்லை வேடத்தில் அடுத்து யார் என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது .சரண்யா துராடி நடிக்கப்போவதாக சொன்னார்கள் .இன்னும் பலரின் பெயரும் கூட அடிபட்டது .ஆனால் யாருமே தெளிவான தகவலுடன் இல்லை .சரண்யா தான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டார் .மற்றவர்களும் கூட யாருமே நடிக்கப் போவதாக சொல்லவில்லை.

இயக்குநரின் மெளனம்
தயாரிப்பு நிறுவனமும் என்ன ஐடியாவில் இருக்கிறது என்பதை சொல்லவில்லை .இயக்குநரும் கூட அமைதியாகத்தான் இருந்து வருகிறார் .இந்த நிலையில் ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது .அதில் அடுத்து முல்லையாக நடிக்கப் போவது காவியாதான் என்று அந்தத் தகவல் சொல்லியுள்ளது. இந்த தகவலை சொல்லியிருப்பது மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமாவின் கணவர் சதீஷ் போட்டுள்ள யூடியூபில்தான் சொல்லியுள்ளனர்.

இவரா அடுத்த முல்லை
இவர்களே இப்படிச் சொல்லியிருப்பதால் நிச்சயம் காவியாதான் அடுத்த முல்லையாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .அன்பு கேரக்டரில் அசத்தி வருபவர்தான் காவியா அடிப்படையில் இவர் ஒரு ஆர்க்கிடெக் . ஆண் ரசிகர்கள் அதிகம் இவருக்கு .இவரும் பாய்ஸை தன் பக்கம் சுத்த விட்டு வேடிக்கை பார்ப்பதில் கில்லாடியாம்.

சினிமா கனவு
சென்னைக்கார பெண்ணான காவியா சினிமாக் கனவுடன் இருப்பவர் .பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.ஆனால் நடிக்க முடியாமல் தவற விட்டு இப்போது வரை வருத்தத்தி்ல இருக்கிறார். மேக்கப் போடுவதிலும், மாடர்ன் உடைகளில் கலகலப்பாக போஸ் கொடுப்பதிலும் கை தேர்ந்தவர் .மனசுக்குள் தன்னை நயந்தாரா ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்பவர். அவர் போல வர வேண்டும் என்றும் ஆசைப்படுபவராம்.

ரசிகர்களின் ஒரே கவலை
ஆக மொத்தம் யார் அடுத்த முல்லைன்னு தெரியலை.. ஆனால் அதை வைத்து ஓடும் தகவல்களை வைத்து தனி சீரியலே எடுக்கலாம் போல .அந்த அளவுக்கு அந்த நடிகை இந்த நடிகை என்று பல பெயர்கள் உலா வந்தபடியேதான் உள்ளது .ரசிகர்களைப் பொறுத்தவரை எப்படி சித்ரா மரணமடைந்தார் என்ற மர்மம் உடைந்தால் போதும் என்ற மன நிலைதான் உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications