குப்புற கவிழுமா war 2? ரஜினிகாந்தின் கூலி ஓவர்டேக்! பூமர் அங்கிள்னா சொல்றீங்க? சீனியர் நடிகர்கள் செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. வழக்கமாக ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அவைகளைவிட, இந்த கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.. இந்நிலையில், கூலி படம் குறித்து மக்களிடம் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விரிவாகவே கூறியிருக்கிறார். அத்துடன், தெலுங்கு மக்களிடம் இப்படம் ஏற்படுத்தியிருக்கும் ஆர்வத்தையும் தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu என்ற சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்..

Television War 2 Coolie film 2

வடமாநிலத்தில் 2700 தியேட்டர்களில் கூலி படத்தை திரையிட போகிறார்கள்.. இப்போதே இந்த படத்துக்கான டேபிள் பிராஃபிட் ரூ.200 கோடியாகும்.. அதாவது இந்த படத்தின் பட்ஜெட் ரூ.375 கோடி என்றால், மொத்த டேபிள் பிராபிட் 600 கோடியை, இந்த கூலி படம் கலெக்ட் செய்துள்ளது. அதனால்தான், தயாரிப்பு நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

ஞாயிறு வரை டிக்கெட் ஃபுல்

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுதீர்ந்துவிட்டன.. ரஜினிக்கான திருவிழாவாக இதுவரை நான் வேறு எந்த படத்திலும் பார்த்ததில்லை.. பாட்ஷா, படையப்பாகூட இந்த அளவுக்கு இல்லை.. ஜெயிலர் படம் வெளியானபோதுகூட மிகவும் சைலண்ட்டாக இருந்தாலும், படம் வெளியாகி வசூல் அபாரமாக போனது..

லோகேஷ் கனகராஜ் அபாரம்

ஆனால், கூலிக்கு பயங்கர மாஸ் உள்ளது.. இன்றைய 2K கிட்ஸ்களின் பல்ஸ் புரிந்தவராக உள்ளார் லோகேஷ் கனகராஜ்..

லியோ படத்தின் செகண்ட் ஆஃப் படம் சரியில்லை என்ற விமர்சனம் லோகேஷுக்கு தீராத மனக்காயமாகவே இருந்த நிலையில், இப்போது விடுவாரா? அதிலும், கமல்ஹாசனுக்கே அப்படியான வெற்றியை தேடித்தந்தவர், ரஜினி படம் என்றால் விடுவாரா? வேண்டுதலுடன் கோயில் கோயிலாக சென்று கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அனிருத்தின் இசை மிக சிறப்பாக வந்துள்ளது.. BGM மிகச்சிறப்பாக பேசப்படும் இந்த கூலி படம் என்கிறார்கள்.. 50 வருடங்கள் இந்திய சினிமாவுக்குள், ஒரு பவர்ஃபுல் மனிதராகவே இருக்க முடியும் என்றால் அது ரஜினியால் மட்டும்தான் முடியும்.

தெலுங்கானா , ஆந்திராவில் ஜூனியர் என்டிஆரின் வார்-2 வரப்போகிறது. ஆனால், சீனியர் நடிகரான நாகார்ஜூனா கூலி படத்தில் நடித்துள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.. இதுவரை நாகார்ஜூனாவை ஆக்‌ஷன் ஹீரோவாக, அதிரடி ஹீரோவாக, காதல் மன்னனாக பார்த்து பழக்கப்பட்ட தெலுங்கு மக்களுக்கு, இந்த படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்துள்ளது, ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ரஜினியா? நாகார்ஜூனாவா?

ரஜினியா? நாகார்ஜூனாவா? இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்களாம்.. இருவருக்குமே சரிசமமான கேரக்டர் தரப்பட்டுள்ளது.. அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில், நாகார்ஜூனா நடிப்பில் தூக்கி சாப்பிட்டுவிட்டாராம்..

இதுவே மற்ற நடிகர்களாக இருந்தால், கிளைமேக்ஸ் காட்சியில் இப்படி வில்லனுக்கு முக்கியத்துவம் தர ஒப்புக் கொள்வார்களா தெரியாது என்று நாகார்ஜூனாவே கூறியிருந்தார்.. ஜூனியர் என்டிஆர் படத்துக்கான வரவேற்பைவிட, கூலி படத்துக்கான எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதாம்.

பூமர் அங்கிள்கள்

இந்த கூலி படத்தில் நடித்துள்ள ரஜினிக்கு ஒரு வயசு, நாகார்ஜூனாவுக்கு ஒரு வயசு, உபேந்திராவுக்கு ஒரு வயசு, சத்யராஜ் வேற.. இப்படியான சீனியர் நடிகர்களுடன், கூலி வரப்போகிறது..

பொதுவாக, சீனியர் நடிகர்களை பூமர் அங்கிள் என்று கிண்டல் செய்வார்கள்.. ஆனால், சீனியர் நடிகர்கள் நடித்துள்ள கூலி படத்தை இப்போது பெருமளவு புக்கிங் செய்திருப்பது 2K கிட்ஸ்கள்தான் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

குப்புற படுக்குமா வார் 2

பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியொன்றில் கூலி படம் குறித்து கூறும்போது, "பாலிவுட்டை பொறுத்தவரை ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள வார்-2 படமும், கூலி படத்தின் தினத்தன்றே ரிலீஸாகிறது.. அமீர்கான் கூலியில் நடித்துள்ளதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து, வார் 2 படத்திற்கான புக்கிங் குறைந்துவிட்டது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆந்திராவிலும், வார்2 படத்தைவிட கூலி படத்துக்கான எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களிடம் பெருகியிருப்பதாக செய்யாறு பாலுவும் தெரிவித்துள்ளது ரஜினி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+