ரம்யா பாண்டியனே வந்தாக் கூட.. புகழ் நிச்சயமா வர மாட்டாராம்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எடுத்த எடுப்பிலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று அதற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது முதல் இப்ப வரையிலும் பிக்பாஸ் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து கொண்டுதான் உள்ளது.

முதல் சீசன் அறிமுகமானதில் தொடங்கி 3 சீசன் முடிந்து இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் பெரும் பரபரப்பாகவும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்திலும் கலக்கிக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தொடங்கி விடும். ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கொரோனா பிக் பாஸ்

கொரோனா பிக் பாஸ்

கொரோனாவின் தாக்கத்தாலும் லாக்டோன் பிரச்சனை காரணமாகவும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் தொடங்கப் போகிறது. பிக் பாஸ் கமல்ஹாசனே வந்து அதை சொல்லி விட்டுப் போய் விட்டார். இதையடுத்து பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. கொனோரா காலம் னஎ்பதால் எப்பவும் இருக்கும் கட்டுப்பாடுகளை விடவும் அதிகமான கட்டுப்பாடுகளோடு இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.

பிக் பாஸ் 4 சீசன்

பிக் பாஸ் 4 சீசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி 4 ஆரம்பிக்கப் போகிறது என்ற புரோமா வந்தது முதலே ரசிகர்கள் இப்பவே யார் யார் அதில் வரப் போகிறார்கள் என்ற ஊகங்களில் இறங்கி விட்டனர். அதை விட முக்கியமாக யார் யார் வந்தால் நல்லாருக்கும் என்ற லிஸ்ட்டையும் இவர்களே போட ஆரம்பித்து விட்டனர். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

யார் யார் வர்றாங்க

யார் யார் வர்றாங்க

அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற லிஸ்ட்டும் அவ்வப்போது ஏதாவது வெளியாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சமூக இணையதளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் கூட இந்த முறை பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

பட்டியல் உண்மையா

பட்டியல் உண்மையா

அதில் 16 பெயர்கள் அடிபடுகின்றன. இதில் மக்கள் மனதைக் கவர்ந்த பலரின் பெயர்களும் இருப்பதால் இந்த லிஸ்ட் உண்மையாக இருந்தால் நல்லாருக்கும என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். கொரோனாவால் ஏற்கனவே பொழுது போகாமல் மனப் புழுக்கத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் வந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஷிவானியும் ரம்யாவும்

ஷிவானியும் ரம்யாவும்

சீசன்4ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் டிவி பிரபலமான ஷிவானி நாராயணன், சூடாகப் பேசி பிரபலமான வாயாடி சூர்யா தேவி, சனம் செட்டி , கோபிநாத், நம்ம ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , மணிமேகலை, அமிர்தா ,அதுல்யா ரவி, கவர்ச்சி நடிகை கிரன் ,வித்யூலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.

ருக் வித் கோமாளி புகழ்

ருக் வித் கோமாளி புகழ்

இதில் புகழ் ஏற்கனவே தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நான் போகமாட்டேன் என்று கூறியிருந்தார். இவர் குக் வித் கோமாளியில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கும் இவருக்கும் இருந்த காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்திருந்தது.

யார் வந்தாலும் நான் வர மாட்டேன்

யார் வந்தாலும் நான் வர மாட்டேன்

அவரிடம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என்று அந்த நிகழ்ச்சியில் ஒரு முறை கேட்ட போது அவர் வெளிப்படையாகவே நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன். ஏனென்றால் நான் மனதில் படுவதை வெகு விரைவில் சொல்லிவிடுவேன். அது எல்லோருடைய மனதையும் ரொம்பவும் பாதித்துவிடும். நான் ஏதாவது சொல்லப் போக அது வைரலாக பரவி உலக மக்கள் அனைவருக்கும் என் மீது இருக்கும் மரியாதை குறைந்து விடும்.அது எனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை நானே அழிப்பது போன்றது என்றும் கூறியிருக்கிறார்.

யார் அந்த லவ் ஜோடி

யார் அந்த லவ் ஜோடி

முதல் 3 சீசன் களிலும் ஏதாவது ஒரு லவ் ஸ்டோரி உருவானது, லவ் ஜோடியும் வெளியில் வந்தது. ஆனால் இந்த சீசனில் அப்படி யார் வந்து மாட்ட போகிறார்கள் என்று ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக காத்து இருக்கிறார்களாம். கண்டிப்பாக இந்த காதல் ஜோடியில் ஒருவராக ஷிவானி இருக்கலாம் என்று இப்பவே பெட் கட்ட ஆரம்பித்து விட்டனராம் பல ரசிகர்கள். ஆக மொத்தம் செம வேட்டை காத்திருக்கிறது இந்த முறை என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+