குண்டு மேல குண்டு தூக்கி போடறானே பாரதி.. தாங்குவாங்களா சவுந்தர்யாம்மா!
கண்ணாம்மாவை கல்யாணம் செய்துக்க பாரதி விருப்பம் தெரிவிச்சுடறான். ஆனால், வீட்டுல சொல்லணுமே.. அம்மாவுக்கு கருப்பு சருமம்னாலே ஆகாது. பெத்த பொண்ணு கருப்பா ஒரு பொண்ணை பெத்துட்டான்னு. அந்த பேத்தியை கொஞ்சறது கூட இல்லை.
இதனால சண்டை வந்து பெத்த பொண்ணு தம்பி கல்யாணத்துக்கு கூட வரமாட்டேன்னு சொல்லிட்டு, உனக்கு கருப்பா ஒரு மருமக வருவான்னு சாபம் விட்டுட்டு போயிடறா.

அஞ்சலி அகிலன் கலயாணத்துக்கு பிறகு கண்ணம்மா தன் கண்ணுலயே படக் கூடாதுன்னு சவுந்தர்யாம்மா வேற கட்டளை போட்டுடறாங்க. இந்த சமயத்துலதான் கருப்பு கண்ணம்மாவை தான் கல்யாணம் செய்துக்கறதா, சவுந்தர்யா அம்மாவின் முதல்மகன் டாக்டர் பாரதி வாக்கு குடுத்துட்டான்.
இப்போ அம்மாவை சமாளிக்கணுமே.. எப்படி விஷயத்தை சொல்றதுன்னு யோசிக்கறான். டைனிங் ஹாலில் மீட்டிங்ன்னு அம்மா, அப்பா, தம்பி, அறிவுமணி எல்லாருக்கும் சொல்றான். எல்லாரும் டைனிங் ஹாலுக்கு வர்றாங்க.

என்னடா குடும்ப விஷயம் பேசறதுக்கு டைனிங் ஹாலில் மீட்டிங்ன்னு சொல்றீங்க. குடும்ப விஷயம் பேசணும்னு சொல்ல மாட்டீங்களான்னு கேட்கறா அறிவுமணி.
நாங்க கார்ப்பரேட் குடும்பம் அதான்.. இப்படின்னு அகிலன் சொல்றான். என்ன கார்ப்பரேட் குடும்பமோன்னு சொல்றா அறிவுமணி. இது நல்லாருக்கு பா...இனி 15 நாளைக்கு ஒரு தடவையாவது இது போல மீட்டிங் போடணும். அப்போதான் குடும்ப விஷயம் பேச வசதியா இருக்கும்னு அப்பா சொல்றார்.
அம்மா, நான் கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு சொல்றான் பாரதி. அப்படியா.. ரொம்ப சந்தோஷம்னு எல்லோரும் குதூகலிக்கறாங்க. பொண்ணு நல்ல இடத்துல பார்க்கணும்.. பாரதி, அவசர படாதேன்னு சொல்றாங்க அம்மா.

இல்லைம்மா அந்த சிரமம் எல்லாம் உங்களுக்கு வேணாம்.. நானே பொண்ணை பார்த்துட்டேன்னு சொல்றான். சரி, பரவால்ல சொல்லு யார் அந்த பொண்ணுன்னு கேட்கறாங்க அம்மா.
அம்மா இன்னொரு விஷயம் கல்யாணம் செய்துகிட்டு நான் அமெரிக்காவுல செட்டில் ஆகப் போறேன்னு சொல்றான். உடனே கண்கள் கலங்க அம்மா சொல்றாங்க, பாரதி.. நீ கல்யாணம் பண்ணிக்கோ வேணாம்னு சொல்லலை. எங்களை விட்டு அங்க போயி செட்டில் ஆகப் போறதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்னு சொல்றாங்க.
அதை அப்புறம் பார்த்துக்கலம்மா..கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. நானே பொண்ணு யாருன்னு சொல்றேன்னு சொல்றான். சரின்னு எல்லாரும் போயிடறாங்க. இப்போ கண்ணம்மாவை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா அம்மா, அகிலன் அஞ்சலி கல்யாணத்தைக்கூட நிறுத்திருவாங்கன்னு புலம்பிகிட்டு உட்கார்ந்து இருக்கான்.
கருப்பு கண்ணம்மாதான் பொண்ணுன்னு சொன்னா என்னென்ன பூகம்பம் வெடிக்குமோ...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications