சூசன் உங்களோட.. திராட்சைக் கண்ணை மிஸ் பண்றோம்.. மறுபடியும் வாங்க
சென்னை: ஒருகாலத்துல இவர் சூப்பரா நடிச்சிட்டிருந்தார்.. பிறகு வில்லி கேரக்டருக்கும் மாறினார் .அவர்தாங்க நம்ம சூசன் ஜார்ஜ்.
சின்னத்திரைக்கு கிடைத்த சூப்பர் நடிகைகளில் இவரும் முக்கியமானவர் .பிறகு சினிமாவுக்கும் போனார் .இப்போது சூசன் பெரிய அளவில் நடிப்பதில்லை. ஆனால் அவரோட ரசிகர்கள் இன்னும் இவரை ஆசையுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
பலசீரியல்களில் நடித்துள்ள சூசன் பெரிய அளவில் டிவியில் வந்திருக்க வேண்டியவர் .ஆனால் என்னமோ தெரியலை.. அவர் பெருசாக வராமல் போய் விட்டார்.

அழகுடன் திறமையும்
நல்ல திறமை உள்ளவர்தாங்க சூசன் .அதிலும் அவரோட கண்ணுக்கும், உதட்டுக்குமே தனி ரசிகர் கூட்டம் உண்டு .அதுதான் அவருக்கு வில்லி கேரக்டரையும் கூட வாங்கித் தந்தது .ஆனால் அதை மட்டுமே பயன்படுத்தி முன்னுக்கு வர அவர் விரும்பலை .திறமைக்கு ஏற்று வந்த கேரக்டர்களைத்தான் அவர் ஏற்று நடித்தார் .அந்த வகையில் அவரைப் பாராட்டியாக வேண்டும்ங்க.

அதிரடி நடிகை
முதல்ல அவர் நடித்த சீரியல்னு பார்த்தா அது விஜய் டிவியில் வந்த சுழியம் என்ற சீரியல்தான் .ஆனால் அவருக்கு பெரிய பெயரை வாங்கித் தந்த சீரியல்னு பார்த்தா அது தென்றல் தாங்க .அவரும் தென்றல் ஸ்ருதியும் இதில் நல்ல தோழிகளாக வந்திருப்பார்கள் .தைரியமிக்க பெண்ணாக இதில் சூசன் கலக்கலாக நடித்திருப்பார் .அவரது நடிப்பு இதில்தான் வெகுவாக பாராட்டப்பட்டது, பார்க்கவும்பட்டது.

தென்றலுக்குப் பிறகு ஆபீஸ்
அடுத்து இவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்த சீரியல்னு எடுத்துக்கிட்டா அது ஆபிஸ் சீரியல்தான் .இதிலும் கூட ஸ்ருதி நடித்திருப்பார் .இருவருக்குமே பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த சீரியல்தாங்க இது .அதன் பிறகு நிறைய சீரியல்கள் குவிந்தன .ஆண்டாள் அழகர் சீரியல், சரவணன் மீனாட்சி (2 பார்ட்டில் நடித்துள்ளார் சூசன்) என சூசனின் கலக்கல் நடிப்பு வேட்டை தொடர்ந்தது.

மைனாவில் கலக்கல்
ஆனால் பின்னர் அவர் சினிமா பக்கம் கவனத்தைத் திருப்பினார் .இதனால் சீரியல் பக்கம் இவரை அதிகமாக பார்க்க முடியவில்லை .சினிமாவில் இவருக்கு வில்லி கேரக்டரே கிடைத்தது .அதில் முக்கியமான வேடம் மைனா. இதில் ஜெயிலின் மனைவி வேடத்தில் நடித்திருப்பார் . இந்த வேடத்துக்காக நிறையவும் பாராட்டப்பட்டார். விருதுக்குக் கூட பரிந்துரைக்காப்பட்டார்.

வில்லி வேடம்
பிறகு நர்த்தகி, பேச்சியக்கா மருமகன் உள்ளிட்ட பல படங்களில்நடித்துள்ளார் .ரட்சகன் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கலக்கியிருப்பார் .அதேபோல ஜாக்பாட் படத்திலும் ஜெயிலர் வேடத்தில் வந்து அசத்தியிருப்பார் .சூசனுக்கு இன்னும் கூட சீரியல்களில் நல்ல இடம் இருக்கிறது .வில்லி வேடத்தில் களம் இறங்கினால் கண்ணை வைத்தே பின்னி எடுப்பார் என்று ரசிகர்கள் சந்தோஷமாக சொல்கிறார்கள்ங்க.

கண்ணழகி சூசன்
சூசனும் கேரளத்தைப் பூர்வீமாகக் கொண்டவர்தான் .ஆனால் வளர்ந்தது வசித்தது எல்லாமே பெங்களூர் சென்னைதான். எனவே மலையாளம், கன்னடம், தமிழ் என எல்லா மொழிகளையும் சரளமாக பேசக் கூடிய திறமையுடன் வலம் வருகிறார் சூசன் .சீக்கிரம் சினிமாவை விட்டு சின்னத்திரைக்கு வாங்க சூசன் என்று ரசிகர்கள் வேண்டி விரும்பி கேட்டு அழைத்துக் கொண்டுள்ளனர் .கண்ணழகி சூசன் மனசுல என்ன இருக்கோ. யாருக்கு சாமி தெரியும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications