ரூ.1000 கோடியை தொடுமா கூலி படம்? ரஜினி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ஸ்டைலிஷ் லுக் நாகார்ஜூனா: பிரபலம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி' . இதில் நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்பெஷல் கேரக்டரில் அமீர் கான், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, கூலி படம் குறித்து நம்பிக்கை தகவல்களை தந்துள்ளார்.
கூலி படத்துக்காக ரஜினிகாந்த் ரூ.280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின.. அதுபோல, லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோவுக்கு கலவையான வரவேற்பு கிடைத்ததையடுத்து, இந்த கூலி படம் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிகிறது..

ரூ.1000 கோடி அடிக்குமா?
அதுமட்டுமல்ல, கூலி படம் ரூ.1000 கோடியை வசூல் செய்யும் என்று இப்போதே இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து சொல்லியிருந்தார்.
அதில், "கூலி படம் 1000 கோடியை அடிக்க வேண்டுமானால், புரமோஷன் அதிகமாக வேண்டும்.. அதிலும் வடமாநிலங்களுக்கு சென்று புரமோஷன் செய்ய வேண்டும். வெறும் சோஷியல் மீடியாவில் மட்டுமே புரமோஷன் செய்தால், 60 கோடியுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் ஜெயிலர் படம் மாதிரி" என்று கூறியிருந்தார்.
மெகா ஹிட்டடிக்குமா கூலிஇப்படிப்பட்ட சூழ்நிலையில், "Cheyyaru Balu" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "2025-ல் மெகா ஹிட் படம் எது? என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது, கூலி படத்தின் து கவனம் அனைவருக்கும் குவிந்துள்ளது..
கங்குவா படத்துக்கு இப்படித்தான் பலரும் பில்டப்பும் தந்தார்கள்.. நான் அதுபோல சொல்லவில்லை.. கதையம்சம் நிறைந்த டூரிஸ்ட் படங்கள் போல எதிர்பாராத அளவுக்கு பல படங்கள் தற்போது ஹிட்டாகி வருகின்றன.. இது நல்ல விஷயமே என்றாலும், அப்படங்கள் ஓடிடியில் வந்தால் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலைமைக்கு பலரும் சென்றுவிடுகிறார்கள்.. காரணம் எல்லாருமே தியேட்டருக்கு செல்வார்கள் என்று சொல்லிவிட முடியாது.
பிளாக்பர்ஸ்டர் படங்கள்
இந்த நேரத்தில் ரஜினி, விஜய் போன்றோரின் பிளாக்பர்ஸ்டர் படங்கள் வந்தால், நன்றாக இருக்குமே என்று எதிர்பார்க்கிறார்கள். விக்ரம் படத்தில் இன்றைய தலைமுறைக்கு கமல்ஹாசனை எப்படி காண்பிக்க வேண்டும்? எப்படி அறிமுகம் இருக்க வேண்டும்? என்றெல்லாம் பார்த்து பார்த்து எடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்..
ஆனால், இந்தியன் 2, தக் லைஃப் மணிரத்னம், இவர்கள் எல்லாம் ஏன் இப்படி படம் எடுக்கிறார்கள் என்று அதிர்ச்சியை தந்து வருகிறது. இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு, பெரிய அளவிலான பட்ஜெட்டில், ஏன் சிறப்பாக எடுக்க முடியவில்லை?
கூலி படம் பிரம்மாதம்
அதனால்தான், லோகேஷ் கனகராஜ் நெல்சன் உள்ளிட்டவர்கள் மீதுதான் மக்களுக்கு கவனம் குவிகிறது. அந்தவகையில், கூலி மீது தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. கூலி படம் பிரம்மாதமாக வந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது..
பெரிய சேட்டிலைட், பெரிய ஓடிடி பெரிய அளவில் கூலி விற்பனை ஆகியுள்ளது.. ஆடியோவும் பெரிய அளவில் விற்பனையாகி உள்ளது.. FMS எனப்படும் வெளிநாடுகளின் உரிமை, கிட்டத்தட்ட 90 கோடி வரைக்கும் கூலி படத்துக்காக காத்திருக்கிறார்களாம்..
ஸ்டைலிஷ் நாகார்ஜூனா
இதுபோக தெலுங்கில் ஒரு பெரிய வியாபாரத்துக்கு கூலி படம் காத்துக் கொண்டிருக்கிறது.. அதுக்கு காரணம் நம்ம நாகார்ஜூனா, ஸ்டைலிஷ் லுக்குடன் இன்றைக்கும் வலம் வரும் ஹீரோ மெட்டீரியல்.. ஆனால், அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வில்லனாக என்ன செய்கிறார்? எப்படி செய்கிறார்? அவரது லுக் இதெல்லாம் பார்த்துவிட்டு, மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது..
அமீர்கான் இந்த படத்தில் நடிக்கிறார்.. சிறிது நேரமே வந்தாலும் கலக்கியிருக்கிறாராம்.. எண்ணூர், ராஜஸ்தானில் அவரை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.. இதனால் வட மாநிலத்திலும் ஒரு எதிர்பார்ப்பு கூலி படத்துக்கு கிளம்பி உள்ளது.. மொத்தத்தில் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது... போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன... ரஷ் பார்த்துவிட்டு, ரஜினியே ரிலீஸ் தேதியையும் சொல்லியிருக்கிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications